பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கபடும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு பிரதமர் அவர்களால் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் […]

Continue Reading

சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய கள்ளன் : 24 மணிநேரத்தில் கைது செய்த பொலிஸ்

சுன்னாகம் கந்தரோடையில் வீட்டை உடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் கந்தரோடை பாரதி வீதியில் உள்ள வீடோன்றில் நேற்று மாலை வீடுடைத்து 21 பவுண் தாலிக்கொடி, மூக்குத்தி, உண்டியல் பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன திருடப்பட்டன.வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள காணி துப்புரவு செய்ய […]

Continue Reading

வீட்டிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி! 17 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொட்டகலை சுகாதார பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஃபாரஸ்ட்விக் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 19 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்திருந்தார். இவருடைய உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கோவிட் […]

Continue Reading

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் – சஜித் பிரேமதாச

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளதோடு , உங்களால் முடியவில்லை என்றால் முடியாது எனக் கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருட்களின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , ‘ பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். உங்களால் நிர்வகிக்க […]

Continue Reading

இதுவரை காலியிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இனங்காணப்பட்ட 1000 தொற்றாளர்களில் பதிவான மரணங்கள் எத்தகையதாக இருக்கின்றது என்று நோக்கும்போது, காலி மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதுடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் இம்மாவட்டங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களில் மரணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும் உயர்வடையும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: […]

Continue Reading

யாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சீன நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முடக்க நிலையில் உள்ள யாழ்.நல்லூர் அரசடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். கீரிமலை ராஜபக்ச மாளிகை என நாங்கள் அறிந்துகொண்டிருக்கின்ற, இந்த இடமும் விற்பனைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகின்றது. இது […]

Continue Reading

கீரிமலையில் உள்ள அரசமாளிகையும் சுமந்திரனின் உணவுப் பொட்டலமும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார். இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட அக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெருவித்த சுமந்திரன் கீரிமலையில் உள்ள அரசமாளிகையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அந்த காணி அமைந்துள் பகுதி பொதுமக்களிற்கு சொந்தமான காணி என்றும் இது தொடர்பாக […]

Continue Reading

யாழில் கொரோனா குறைந்தபாடக இல்லை : அரசாங்க அதிபர் கவலை

யாழில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்.. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர்,அன்ரியன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி […]

Continue Reading

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு : வியாளேந்திரன் நடவடிக்கை

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு இல்லாத காரணத்தினால் இன்று சில நாட்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார். வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நோயாளிகள் கட்டில்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் பி.கேதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தகவல் பிரிவு […]

Continue Reading

ஓட்டமாவடி பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் தொடரச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனையிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை ஏற்றப்பட்டது. கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார […]

Continue Reading

3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான இறக்குமதிகளுக்கு செலுத்துவதற்கு மாத்திரம் போதுமான அந்நிய செலாவணியே இலங்கையின் கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார். சீனாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாற்ற வசதிகளுக்காக கிடைத்ததுடன் இந்த தொகையானது நாட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிக்கு […]

Continue Reading

முன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரியது இலங்கை அரசு

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் நஷ்ட ஈட்டு முன் தொகையாக 40 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசு கோரியுள்ளது. அத்துடன், கப்பல் தீ பற்றியதன் விளைவாக ஏற்பட்ட ஏனைய பாதிப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் 5 குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Continue Reading