டக்ளஸ் போட்ட பஸ்ஸால் நெருப்பெடுக்கும் இந்திய மீனவர்கள்..

டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு,பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் (11.06.2021) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் […]

Continue Reading

நிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்

தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், […]

Continue Reading

பயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனாநோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறைவடைந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை மேலும் சில காலத்திற்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தினமும் இது தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத்தடை […]

Continue Reading

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும்? விசேட வைத்திய நிபுணரின் பதில்

அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெருவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும்; கருத்து தெரிவிக்கையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என ஹேமந்த ஹேரத் […]

Continue Reading

யாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அனுமதிக்கு மேலதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் […]

Continue Reading

பருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு

பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது கண்டறியப்பட்டது. அதனை சோதனையிட்ட போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு சாக்குகளில் சுமார் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது அப்படகில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட கேரள […]

Continue Reading