யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 கொரோனா நோயாளிகள் இன்று (06.15.2021) இரவு 9 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். […]

Continue Reading

தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுதருமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை

தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுதருமாறு சர்வமத தலைவர்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். இதன் போது மக்களுக்கு கொடுக்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை அதிகரித்தல், தற்போதய பயணக்கட்டுப்பாடுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் தடைப்படாமல் செல்லுதல், தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு கானுதல் மற்றும் விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை சர்வமத தலைவர்கள் முன்வைத்தனர். சர்வமத தலைவர்களது குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என் யாழ் […]

Continue Reading

யாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழில் தொற்று அதிகரிப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய […]

Continue Reading

நாவற்குழியில் 200 கட்டிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க நாவற்குழியில் கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில்குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது 200 கட்டிகளுடன் அமைக்கப்பட்டு இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக […]

Continue Reading

கோறளைப்பற்று மத்தி பிரததேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்த வறிய மக்களுக்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் வழிகாட்டலில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள வாழைச்சேனையிலுள்ள மூன்று கிராம அதிகாரி பிரிவுகள், பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு கிராம அதிகாரி பிரிவுகள் ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 3900 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டது. ஈஸ்ட் லங்கா பொலிஷக் நிறுவனத்தின் பணிப்பாளர் […]

Continue Reading

நயினாதீவில் கரை ஒதுங்கம் மருத்துவ கழிவுகள்

நயினாதீவு தெற்கு கடற்கரையில் ஒதுங்கம் மருத்துவ கழிவுகளால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இனனளவுகள் இந்தியாவில் கடலில் கொட்டப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது. வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் நாளைய தினம் விசாரிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continue Reading