நம்பிக்கையில்லா பிரேரனையில் சஜித் கையொப்பமிட்டார்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொண்டு வரவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டுள்ளார்.

Continue Reading

சமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக ஆராய்து பார்ப்பதற்காக 5 பேர்கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. இதன்போது  லிட்ரோ கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 600 ரூபாவினாலும் லாப் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலையை 751ரூபாவினாலும் அதிகரிக்குமாறு கோரி இருக்கின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதற்கு இணக்கம் இல்லாமல், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இருந்தபோதும் நாட்டின் […]

Continue Reading

யாழ் சாவற்கட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட சாவற்கட்டு கிராமத்தின் ஜே.131 கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார், சாவக்காடு கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்போது அதிகளவானோர் தொற்றுக்குள்ளானதன் காரணமாக குறித்த பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்து யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இன்று மாலை முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Continue Reading

இப்ப போட்டது சின்ன பஸ் அடுத்தது பெரிய சைஸ் ரயில் பெட்டி : டக்ளஸ் அதிரடி

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பேரூந்துகளையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்பாடினை இடைநிறுத்த போவதில்லை என்றும் பேருந்துக்கள் மற்றும் புகையிரத பெட்டிகளையும் கடலில் தொடர்ச்சியாக போடப்போவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காட்டமான பதில் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பாவனைக்கு உதவாத பேரூந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் […]

Continue Reading

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு குறித்த போராட்டமானது தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை தொடரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

மக்கள் வங்கி பீப்பள்ஸ் லீசிங் நிறுவனங்களால் இரண்டு பீ.சீ.ஆர் கருவிகள் அன்பளிப்பு

மக்கள் வங்கி, பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமத்தினால் பிரதமர் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு பீ.சீ.ஆர் கருவிகள் உள்ளிட்ட 25 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இன்று (16) அலரி மாளிகையில் வைத்து வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமம் 2021 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஈட்டிய இலாபத்தின் ஒரு பங்கை இப்பணிக்காக ஒதுக்கியுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த உபகரணங்களுக்கான தேவையுள்ள வைத்தியசாலைகள் சிலவற்றுக்கு இவ்வாறு […]

Continue Reading

வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்

வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்த சம்பவம் யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரி (வயது40) என்ற ஒரு வயது குழந்தையின் தாய்,வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பீ.சி.ஆர் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக தொியவருகின்றது.

Continue Reading

புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் இனை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்ததாக வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தப்பட்ட பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சுங் நியமிக்கப்படுவார். தற்போது அமெரிக்க தூதுவர் அலைனா அலெய்னா டெப்லிட்ஸ் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

நாடு திரும்புகிறார் பசில்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காக இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள கடும் அதிருப்திக்கு மத்தியில் பசிலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Continue Reading