மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையால், எதிர்வரும் 21 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றபோது, சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

மன்னாரில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கிலம் மீட்ப்பு

மன்னார்- கரடிக்குளி கடற்கரையில் எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்று சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்தத்திற்கு பின்னரே மன்னார் கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த கப்பலின் இரசாயன கழிவுகளினால் தங்களது வாழ்வாதாரமும் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் எரி காயங்களுடன் திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளமையினால் அப்பகுதி மீனவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தியாகிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு இன்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச […]

Continue Reading

டெல்டா வைரஸ் தொடர்பில் பொதுச்சுகாதார சங்கத்தலைவர் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தெமடகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு மிகவும் ஆபத்தானது இந்த வைரஸ் ஆனது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இந்த வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்ட பகுதி சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். அங்குள்ளவர்களில் அதிகமானோர் சுத்திகரிப்பு பணியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் […]

Continue Reading

சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (18) பிற்பகல் தெரிவித்தார். சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். விவசாய பெருமக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் கௌரவ பிரதமர் இதன்போது […]

Continue Reading

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக குறைவு

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 7 இல் இருந்து 6ஆக குறைவடைகிறது. இதேவேளை இந்த உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஊடாக, அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18இல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி […]

Continue Reading

சாதாரண சளி காய்ச்சல் வந்தால் கொரோனாவில் இருந்து தப்பலாமா?

சாதாரண சளி, காய்ச்சல் வந்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து “ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்´ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை எதிர்த்து அவரது […]

Continue Reading

பயணத்தடை காலங்களிலும் இனி அஞ்சல் அலுவலகங்கள் திறந்திருக்கும்

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்பிகாரம் தபால் திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகளுக்கு பொருட்கள் மற்றும் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் சேவை உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரைவு தபால் சேவை, தபால் நிலையம் ஊடாக மருந்துகளை பகிர்ந்தளித்தல் மற்றும் பணப்பரிமாற்றம் என்பன இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Continue Reading

யாழில் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா அங்கி ( புகைப்படங்கள் )

யாழ் நகரில் இயங்கும் நடமாடும் பேக்கரி பொட்களின் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஓட்டமாவடி மக்களிற்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா கால பிரயாணத்தடை காரணமாக எல்லைப்புறத்தில் வாழும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அன்றாட ஜீவனோபாயத்திற்கு பெரும் கஸ்டத்திலுள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மஜ்மா நகர் மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அன்றாட ஜீவனோபாயத்திற்கு பெரும் கஸ்டத்திலுள்ளமையினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் பிரதியமைச்சர் உசைன் பைலா மற்றும் குடும்பத்தினரால் மேமன் எய்ட் பவுண்டேசன் ஊடாக 2,600 ரூபா பெறுமதியான […]

Continue Reading

கொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்

இலங்கையில் கடந்த 14 நாட்களில் பதிவாகிய கொரோனா தொற்யாளர்களின் எண்ணிக்கைணின் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது இதன்படி முசலி, பலுகஸ்வேவ, சேருவில, செங்கலடி, காரைதீவு தெற்கு மற்றும் லொஹுகல போன்ற சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் மாந்தை கிழக்கு வெலிஓயா போன்ற பகுதிகளில் அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Continue Reading

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைமாவட்டங்களிலும்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய […]

Continue Reading