திருத்தப்பட்ட அறிவிப்பு பயணத்தடை தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்

பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது […]

Continue Reading

பயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை

நாளை பயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில்.. நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டை நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை கவலை அளிப்பதாக அந்த சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அத்துடன், நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் […]

Continue Reading

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிப்பு காலம் நீடிப்பு

நடமாட்டத் தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 21,22,23 ஆகிய திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

2,500 கடந்த கொரோனா மரணங்கள் 1.07 சதவீதத்தால் அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 54 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற 54 மரணங்களில் 31 ஆண்களினதும், 23 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன. 30 வயதிற்கும் குறைந்த பெண் ஒருவரினதும், ஆண் ஒருவரினதும் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 30 […]

Continue Reading

பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்..

நாளை (21) அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே எதிர்வரும் நாட்களிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார். அலுவலகங்களில் பணிபுரிவதற்கு குறைந்தளவானோரையே சேவைக்கு அழைக்க வேண்டும் வீடுகளிலிருந்து Online ஊடாக பணிபுரிவோர் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதற்கு நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் […]

Continue Reading

முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு இடம்மாற்றம்

மட்டக்களப்பு – ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று முழந்தாளிட வைத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கை மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொடுத்த கடன் எவ்வளவு தெரியுமா?

இலங்கை மின்சார சபை, நிலுவையிலுள்ள 8,000 கோடி ரூபா கடனை செலுத்தி எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது. 2019 மார்ச் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பெற்றுக்கொண்ட எரிபொருளுக்காக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், இலங்கை மின்சார சபைக்கு மின்னுற்பத்திக்கான செலவு குறைவடைந்துள்ளது எனவே இந்த காலகட்டத்தில் இந்த கடனை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Continue Reading

இலங்கையில் தென்னை மரங்களை வெட்ட இனி பெர்மிசன் எடுக்க வேண்டும்.

தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி கட்டாயம்மாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதாயின் அப்பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளரின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.

Continue Reading

நாளை பேருந்துகளும் தொடருந்துகளும் இயங்கும்

நாளை பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கத்தில் 6 தொடருந்துகளும், கரையோர மற்றும் களனிவெளி மார்க்கங்களில் தலா 4 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 3 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதியில் தனியார் பேருந்துகளும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Continue Reading

வடமாகாண பிரதம செயலாளர் மீது தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பாரிய குற்றச்சாட்டு

ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் வடமாகாண பிரதம செயலாளரின் செயற்பாடானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமையப் பெறவேண்டிய அதி தீவிர சிகிச்சை நிலையத்தினை இவ்வருடத்தினுள் ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது, வைத்தியசாலையை நாடி வரும் மக்களின் நலனில் அக்கறை இல்லாத செயற்பாடாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை யாழ்.மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக மக்களிற்கான சேவையை வழங்கி வருகிறது. வலிகாமம் […]

Continue Reading