வியாழேந்திரனின் வீட்டில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு ( புகைப்படங்கள் )

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி, மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் […]

Continue Reading

கிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்

பயணக் கட்டுப்பாடுகள் இன்று திங்கள்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை, ஓட்டமாவடி, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் பொது மக்களின் நடமாட்டம் கடைத்தெருக்களில் அதிகரித்தே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதியில் பொது சந்தை, வர்த்தக நிலையங்கள், மதுபானசாலை, வங்கிகள் என்பற்றில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்பட்டது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்தினால் […]

Continue Reading

அதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்

யாழில் அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். நாடு பூராகவும் அமுல்ப்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நபர் ஒருவர் கொள்வனவு செய்து எடுத்துச்செல்லும் அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் […]

Continue Reading

யாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது. நாடு பூராகவும் அமுழ்ப்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வேகாமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களில் அதிகமான நபர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது. அத்தோடு மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரனமாக சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்கான அதிகமான […]

Continue Reading

இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உள்பட்ட திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் இளவாலை பொலிஸார் கூறினர்.

Continue Reading

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் தமது வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்து கொழும்பு,மோதரை- வெல்லம பகுதிவாழ் மீனவர்கள் குழுவொன்று நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கொழும்பு-மோதரை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட உள்ளிட்ட ஒரு குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கும் குறித்த குழுவினருக்கும் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது நடமாட்ட தடையை மீறியமைக்காக இவர்கள் மீது சட்ட […]

Continue Reading

மட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பிற மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப்பயிர்செய்கை செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தவண்ணம் உள்ளமை தொடர்பில் அவதானங்களை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவ்விடம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். மேற்படி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதியுடன் அங்கிருந்து சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் விலகிச் செல்ல வேண்டும் […]

Continue Reading

தொண்டமனாறில் 174 கிலோ கிராம் கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உடுவிலில் வீடுகளை உடைத்து திருடிய கும்பல் கைது

உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர். அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற […]

Continue Reading

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே நடைபெறுகிறது

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அடுத்த வாரம் முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வழமைபோன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அகில […]

Continue Reading

ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவை விற்றவர் கைது

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரம் செய்துவருபவர் ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) இரவு முற்றுகையிட்டு 14 கிராம் 75 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம் 3 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இதன்போது 3 பேரை கைது செய்ததுடன் பிராதன வியாபாரி தப்பியோடியுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப் படையினருடன் இராணுவ […]

Continue Reading

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விபரம் வெளியானது

நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 8,574 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 252 பேருக்கு […]

Continue Reading