மட்டக்களப்பு இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகியதில் 2 இராணுவத்தினர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகி கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதுஇதில் சென்ற இருவர் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் […]

Continue Reading

கலாசார சீரழிவு 6 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் […]

Continue Reading

அரசுக்கு செலவுக்கு மேல் செலவு : ஜனாதிபதி இன்றைய உரையில் சுட்டிக்காட்டு

கொவிட் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடு விதித்து, சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு எவ்வளவு அறிவுறுத்தப்பட்டாலும், சில பொது மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் என இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, “இந்த நேரத்தில் மிகவும் கடுமையான பிரச்சினை ​கொவிட் -19 உலகளாவிய தொற்று நோயாகும். தற்போதைய நிலையில் தனது மக்களுக்காக எந்தவித தடுப்பூசியையும் […]

Continue Reading

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான தகவல்

தற்போது அமுலில் உள்ள வாகன இறக்குமதி தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் நாட்களில் மைக்ரோ வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Continue Reading

யாழில் திங்கட்கிழமைமுதல் இரண்டாவது தடுப்பூசி

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக யூன் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமைவரை இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் – குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு […]

Continue Reading

யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவு இரண்டு இளம் பெண்கள் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் […]

Continue Reading

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு

நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள், வழமைப்போன்று இன்று பணிக்கு சென்றிருந்தபோதே திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது

யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரனமாக ஜெ 350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைபரபடுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

Continue Reading

யாழில் இன்னும்மொரு கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டது

யாழ்.மாவட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜே/350 கிராம சேவகர் பிரிவும், மன்னார் மாவட்டத்தில் பியர் மேற்கும் மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள 5 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வாக தொிவித்திருக்கின்றார். இதேபோல் பதுளை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், கொழும்பு […]

Continue Reading

எரிபொருள் விலையை குறைக்கின்றது அரசாங்கம்

எரிபொருள் விலையினை இன்று வெள்ளிக்கிழமை குறைவடைவதற்கான சாத்தியம் இருப்பதாக அரசின் மேல்மட்ட தகவல்கள் தெருவிக்கின்றன எரிபொருள் விலையினை குறைப்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுளதாகவும் அதன் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பயணத்தடை தொடர்பாக ராணுவ தளபதியின் நிலைப்பாடு

பயணத் தடைகள் நீக்கப்பட்டாலும் அடுத்த சில வாரங்கள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது கட்டாயமாகும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தினசரி பதிவாகும் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், பயணக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டியது கட்டாயம் என அவர் கூறிப்பிட்டார். தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது என்று ராணுவ தளபதி தெரிவித்தார். கடந்த சில நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது மக்களின் நடத்தை மிகுந்த கவலையளிப்பதாக […]

Continue Reading

பசில் ராஜபக்ஷ ஜூலை 6 இல் அமைச்சராக பதவியேற்கவுள்ளார் பெட்ரோல் விலையும் குறைவடையவுள்ளது

தனிப்பட்ட விஜயத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பிய பசில் ராஜபக்ஷ ஜூலை 6 செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், மேலும் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியல் வட்டாரங்களின் தகவல்களின்படி, பசிலின் இரட்டை பிராஜ உரிமை தடைசட்டம் 20 ஆவது சட்ட திருத்தத்திலிருந்து நீக்கப்பட்டது, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டாரா பதவி விலகிய பின்னர் பசில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார். 2010-2015 காலகட்டத்தில் பசில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்தார் இம்முறை பசில் […]

Continue Reading