இலங்கையில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகாக விற்பனை செய்யும் இணையத்தளங்கள்

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதுவரையில் நான்கு இணையத்தளங்கள் தொடர்பான தகவல்கள் […]

Continue Reading

பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 லெம்டா

தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 வைரஸ் திரிபு பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த கொவிட்-19 திரிபுக்கு லெம்டா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் திரிபு தொடர்பிலான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கொவிட்-19 டெல்டா திரிபு இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்

உலகளாவிய ரீதியாக வேகமாக பரவி வரும் கொவிட்-19 டெல்டா திரிபுடன் 13 பேர் நாட்டின் ஐந்து இடங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். டெல்டா திரிபு தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நெக்ஸ்ட் ஸ்ரெய்ன் இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது. கொழும்பு, திருகோணமலை, காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் தெமட்டகொடை பகுதியில் தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் டெல்டா திரிபுடன் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அதில் தெமட்டகொடை பகுதியில் அடையாளங் காணப்பட்ட ஐந்து […]

Continue Reading

திருகோணமலையில் திடீரென உயிரிழந்த 7 வயது சிறுவன்

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) மாலை பகல் சாப்பாட்டை உண்டு விட்டு தூங்கி எழும்பிய போது மயக்கமுற்ற நிலையில் சிறுவன் எழும்பியதாகவும் இதனையடுத்து கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா கூபா நகர் பகுதியைச் சேர்ந்த நளீம் முகம்மட் நஸ்மிர் (07 வயது) […]

Continue Reading

வல்லிபுர கோவிலில் பழைய நிர்வாகத்தினரால் புதிய நிர்வாகத்தினருக்கு பிரச்சனை

வல்லிபுர ஆழ்வார் கோவிலின் பழைய நிர்வாகத்தினரின் அத்துமீறிய தலையீட்டில் 27.06.2021 சுகாதார விதிமுறைகளை மீறி பூசை இடம்பெற்றதாகவும் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற பூசைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என வல்லிபுரஆழ்வார் கோவில் புதிய நிர்வாக செயலாளர் வேலாயுதம் சிறிஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். இன்றையதிம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது தற்போது கொரோனா மூன்றாவது அலை இடம்பெறுகின்ற நிலையில் […]

Continue Reading

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவசியமான சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண தொகுதி “முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று (02) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படக்கூடிய 3 வென்டிலேடர்கள் (Ventilators), 4 ஒக்சிஜன் கருவிகள் (Oxygen Therapy), 3000 பீ.பீ.ஈ (PPE). தொகுதிகள் உள்ளிட்ட மருத்துவ உபரகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவின் […]

Continue Reading

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவசர சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று இன்று பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து […]

Continue Reading

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக தடுப்பூசி யூலை 5ம் திகதி முதல் 10ம் திகதிவரை

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கு 50,000 சினோபாம் தடுப்பு மருந்துகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் யூலை மாதம் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும் என வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் 49,602 பேருக்கு முதல் தடவை கோவிட்-19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடவை […]

Continue Reading

ஒருதடவை செலுத்தும் புதிய தடுப்பூசி அமெரிக்கா கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ஜொன்சன் எண்ட் ஜொன்சன் நிறுவனம் ஒருதடவை செலுத்துகை மூலம் கொவிட் பரவலை கடுப்படுத்தக் கூடிய தடுப்பூசியொன்றை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்காக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் இரண்டு செலுத்துகைகள் செலுத்திய பின்னரே கொரோனாவுக்கு எதிராக செயற்படுகின்றன. இந்நிலையில், குறித்த தடுப்பூசி வேகமாகப் பரவி வரும் டெல்டா திரிபு மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர […]

Continue Reading

பாடசாலைகள் அனைத்தும் எப்போது திறக்கப்படும்?

தற்பொழுது மூடப்பட்டு இருக்கின்ற பாடசாலைகள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மீளத்திறக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் பரவல் சம்பந்தமான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதற்காக இந்த மாதம் முதல் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. அதே நேரத்தில் பத்து வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பு ஊசிகளைச் செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தற்போது குறைவடைந்து செல்கின்ற கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை […]

Continue Reading

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவாரா?

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்கான குறிப்பிட்ட திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியிலுள்ள உறுப்பினர்கள்கூட ஒவ்வொரு திகதிகளை பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற மீள்வருகைக்காகத் தெரிவித்து வருகின்றனர். எனினும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் விலகிய பின்னரே அதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும் இதுகுறித்து பஷில் ராஜபக்ஷவுடன் அடுத்த வாரத்தில் கலந்துரையாடப் போவதாகவும் பிரதமர் மஹிந்த கூறியுள்ளார்.

Continue Reading

திருமணம் செய்ய மறுத்த பாடசாலை மாணவிக்கு கத்திகுத்து

தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த பாடசாலை மாணவி ஒருவரை 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த மாணவி படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தம்புள்ளை பன்னம்பிடிய, மெனிக்தென பிரதேசத்தை சேர்ந்த அனுஷா செவ்வந்தி என்ற 16 வயதுடைய சிறுமியின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி மற்றும் அவரது இளைய சகோதரன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழந்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமியிடம் இளைஞன் ஒருவன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கோரி […]

Continue Reading