நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை

நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Continue Reading

முகநூலில் தன்னைப்பற்றி அவதூறு எழுதியதற்காக இருவரை சிலுவையில் அறைந்தவர் கைது

துஷ்மந்த பெர்ணான்டோ என்ற நபர் இருவரை சிலுவையில் அறைந்தவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்ப்டடுள்ளார்.. முகநூலில் தன்னைப்பற்றி விமர்சனம் எழுதியதாகக் கூறி பலகொல்ல பிரதேசத்தில் வைத்து இருவரை வேன் ஒன்றில் கடத்தியிருந்த இவர், கண்டி – அம்பிட்டிய பிரதேசத்திலுள்ள மலையுச்சி ஒன்றில் அவர்களை சிலுவைபோன்று செய்யப்பட்டிருந்த பலகையில் ஆணியடித்து அறைந்திருக்கின்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாகிய அவர் இன்று காலை பொலிஸாரிடத்தில் சரணடைந்ததுடன், மேலும் இருவரை பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை குறித்த நபருக்கு அரசியல்செல்வாக்கும் அதிகமாக […]

Continue Reading

வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் அபிவிருத்தி கூட்டம் யாழில்

கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரட்ண யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தார். யாழ் மாவட்டத்தில் “வாரி சௌபாக்கியா நீர்ச் செழுமை” செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய நீர்ப்பாசன அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், […]

Continue Reading