10,000 இனை தாண்டிய கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 இனை எட்டியது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 184 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,140ஆக அதிகரித்துள்ளது

Continue Reading

20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இராணுவத்தளபதி

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.. இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார். எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதற்கு மேலதிகமாக விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Continue Reading

கிருமிகளுக்கு எதிராக 99.9 சதவீத பாதுகாப்பை வழங்கும் புதிய முகமூடி

பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி குழு கிருமிகளுக்கு எதிராக 99.9 சதவீத பாதுகாப்பை வழங்கும் புதிய முகமூடியை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. முகமூடியை உருவாக்கிய ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, இலங்கையின் ஏற்றுமதித் தொழிலை புதுப்பிக்க திறம்பட பயன்படுத்த முடியும், இது கொரோனா சூழ்நிலையில் சரிந்துவிட்டது. ரெஸ்பிரான் நானோ ஏ. பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். திரு. டி. லாமவன்ச கூறினார்.

Continue Reading

கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்காததால் பல உயிரிளப்புக்கள் – சத்தியமூர்த்தி

கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை இதனால் சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு விடுதிகளில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கின்றது. குறிப்பாக தொற்று […]

Continue Reading

வல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டி கொரோனோவால் உயிரிழப்பு

வல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டியொருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளன நிலையில் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை சிவகுரு வீதி , மாதவடியை சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா (வயது 99) என்பவரே உயிரிழந்துள்ளார். 19922ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி பிறந்த புஸ்பகாந்தியம்மாவிற்கு 12 பிள்ளைகளும் , 64 பேரப்பிள்ளைகளும் , 133 பூட்டப்பிள்ளைகளும் , 42 கொள்ளுபேரப்பிள்ளைகளும் உள்ளனர் அவர் தனது வீட்டில் நேற்று திடீரென நோய் வாய்வாய்ப்பட்ட நிலையில் மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது […]

Continue Reading

இலங்கையில் 4 வது நாளாக 3,000 ஆக தினசரி கொரோனா தொற்று

இலங்கையில் தொடர்ச்சியாக 4 வது நாளாக பதிவாகும் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3333 ஆகும். இதற்கிடையில், இலங்கையில் இருந்து தினமும் பதிவாகும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களில், இலங்கையில் 200 க்கும் மேற்பட்ட தினசரி கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் நேற்று நாட்டில் 145 கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 3 ஆம் தேதி இறப்புகள் ஏற்பட்டதாக சுகாதார […]

Continue Reading

டக்ளஸை இனியும் நம்பி எந்த பிரியோசனமும் இல்லை!!! எதுக்கு தெரியுமா?

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் தொழில் முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்த தங்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்,   கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன், தமது கடல் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக இந்தியக் கடற்றொழிலாளர்களின் […]

Continue Reading

கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகம்

நாடளாவிய ரீதியில் சந்தையில் நிலவிய சீனி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனியினை விநியோகம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஊடாக சீனியை வழங்குவதற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் மாவட்டம் முழுதும் இடம் பெற்றது. கூட்டுறவு […]

Continue Reading

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனுக்கு இன்று தேர் திருவிழா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை இடம்பெற்றது. கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தவர்களுடன் நல்லூர் உற்சவம் உள்வீதியில்  இடம்பெற்று வருகின் நிலையில், இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடு, வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க காலை 7.00 மணியளவில் நல்லூர் முருகன் சிறியரக ரதத்தில் ஆலய உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.  நல்லூர் தேர்த் திருவிழாவின் போது இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாக கலந்து […]

Continue Reading

ஆதிவாசிகள் சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் மரணம்

ஆதிவாசிகள் சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் மரணம் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

Continue Reading