கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மூன்று குழந்தைகள் பிரசவம்

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொழும்பில் உள்ள டி சொய்சா மகளிர் மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. 26 வயதான தாயும் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் கூறினார்.

Continue Reading

முன்னாள் தமிழ் வானொலி அறிவிப்பாளர் கைது

முன்னாள் வானொலி அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட மேலும் பல பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு பானங்கள்ம, பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர், வயின் ஆகியவை அடங்கும். மேலும் குறித்த புதிய விதிகள் சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளுக்கும் பொருந்தும் […]

Continue Reading

பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக உதித் லொக்குபண்டார நியமனம்

பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை உதித் லொக்குபண்டார அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் இன்று (09) அலரி மாளிகையில் வைத்து பெற்றுக் கொண்டார். உதித் சஞ்சய லொக்குபண்டார அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான விஜமு லொக்குபண்டார அவர்களின் சிரேஷ்ட புதல்வராவார். பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2009ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உதித் லொக்குபண்டார அவர்கள் 2015ஆம் ஆண்டு வரை […]

Continue Reading

நாமலின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயம்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று செப்டம்பர் 9 மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இன்று மதியம் வருகைதந்த அவர் சென் பொஸ்கோ பாடசாலை அருகில்புனரமைக்கப்பட்டுவரும் குளம் , ஐ திட்ட வீதியையும்,ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம்,யாழ்.மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை பார்வையிட்டார். நாமல் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை […]

Continue Reading