சடலங்களால் நிரம்பி வழியும் பருத்தித்துறை வைத்தியசாலை – தகனம் செய்ய முடியாததால் அவலம்

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்திய சாலையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனோ நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனோ தொற்றுக்கு […]

Continue Reading

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா

அமைச்சர் சமல் ராஜபக்சவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய அமைச்சரவை அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பந்துல குணவர்தனா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். கடந்த காலங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

யாழில் கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த (50 வயது) பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த (63 வயது) ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த (81 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த […]

Continue Reading

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரிக்க சொல்லவில்லையாம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐநா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட […]

Continue Reading

ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம்திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தற்போது பதிவாகும் புதிய கொரோனா தொற்றுக்கு 100% டெல்டா திரிபே காரணம் அதிர்ச்சி அறிக்கை

நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொரோனா தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வெவ்வேறு வகையான கொவிட் திரிபு பீசிஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். […]

Continue Reading