அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தனா கூறினார்.

Continue Reading

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி சுகாதார அமைச்சுக்கு!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சுகாதார அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த ஆண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படாது என்று சுகாதார அமைச்சர் கூறினார். கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Continue Reading

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீங்குமா?

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை தளர்த்துவதில் கவனம் செலுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்தார். சர்வதேச வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக கோவிட் ஊசி போடுவதால் சுற்றுலாத் துறை விரைவில் மீண்டும் தொடங்க முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்

Continue Reading

தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்ட முதியவரின் சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். வல்வெட்டித்துறை இத்தியடியைச் சேர்ந்த கந்தையா தேவராசா என்கிற 76 வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டதுடன்,சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்தவர் நேற்றைய தினத்திலிருந்து காணமல்போன நிலையில் இன்று காலை மீன் பிடிக்க சென்றவர்களால் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் […]

Continue Reading

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை
தமிழருக்கு என்று புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?
தவிசாளர் நிரோஷ் கேள்வி

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இது தான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார். தியாகி திலீpபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களான நாம் தியாகி திலீpபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே பாராளுமன்ற […]

Continue Reading

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் திலீபனுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48க்கு அவர் உயிர்நீத்தார். அவர் […]

Continue Reading

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் பயிற்சி பட்டறைகள்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி போதனாசிரியர் பிரிவில் இயற்கை பசளை தயாரித்தல், இயந்திர பயன்பாடுகள் தொடர்பிலான பயிற்சி நெறி இடம்பெற்றது. ஓட்டமாவடி போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், கமநலசேவை திணைக்கள பெரும்போக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ரசீட், கூட்டுப்பசளை […]

Continue Reading

தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் சிவாஜிலிங்கம் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.  வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.  அதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். 

Continue Reading

அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading