யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமானது. நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்று வருகிறது. நிகழ்நிலையில் இன்று காலை 9 மணி முதல் […]

Continue Reading

ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் அவர்கள் வாழ்த்து

கொவிட் தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) தெரிவித்தார். உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி அமைச்சின் ஊடாக முதல் முறையாக ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையும் இதன்போது இடம்பெற்றது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு […]

Continue Reading

35 லட்சம் பெறுமதியான உபகரணம் யாழ் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க கொவிட் – 19 நிலைமைக்கு உதவும் முகமாக அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு American Jewish World Service (AJWS) நிதி அனுசரனணயில் ரூபா 35 இலட்சம் பெறுமதியான இரண்டு Multipara Meter Monitor – Modular Type அடங்கிய மருத்துவ உபகரணம் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களிடம் […]

Continue Reading

கீரிமலை கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த 19 வயதுடைய சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் இளைஞனே காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக கீரிமலைக்கு சென்று இருந்ததாகவும் , கிரியைகளை முடித்துக்கொண்டு, கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார். சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , […]

Continue Reading

நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் ஆகியன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய, பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 […]

Continue Reading

யாழில் சம்பள உயர்வு வேண்டி அதிபர் ஆசிரியர்கள் போராட்டம்

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வேண்டியும் உலக ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது. இன்று முற்பகல்-10 மணியளவில் வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாகவும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் கல்வி நெருக்கடிக்கு தீர்வு வழங்கு, 24 வருட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச […]

Continue Reading

நாளை யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க  முடியாது என்றும் அதனை […]

Continue Reading

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதிக்கு பூட்டு

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் தடைப்பட்டு இருக்கும் அதனால் மாற்று வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறும் , அதனால் ஏற்படும் சிரமங்களை […]

Continue Reading

நடுக்கடலில் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் மோதல்

கற்கடதீவில் இந்திய இழுவை படகு குருநகர் படகு மீதி மோதியதோடு படகில் இருந்தோர் மீதும் தாக்குதல்! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை […]

Continue Reading

நாவற்குழி பலபரிமாண நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் – நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கமைய யாழ் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி பணிகள், உத்தியோகபூர்வமாக திட்டத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி […]

Continue Reading

மேல் வெடி வைத்து கைது செய்த பிரதேசசபை உறுப்பினர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட  வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊரெழு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு   பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.  அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் […]

Continue Reading

யாழில் காரில் சென்ற நீதிபதிக்கு கைகளை காண்பித்த மூவருக்கு நடந்த தரமான சம்பவம்

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரோயகம் செய்ததன்மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.20 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் யாழ்ப்பாணம் – பருத்தித்துகை முதன்மை வீதியில் பயணித்துள்ளார். அவ்வேளை முச்சக்கர […]

Continue Reading