யாழ் பல்கலைக்கழகத்தில் கார்த்திகை விளக்கீட்டிற்கும் தடை

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர். கடந்த வருடம் கார்த்திகை தீபம் […]

Continue Reading

போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நிலையம் முற்றுகை

சாரதிப் பயிற்சி பெறாதவர்களுக்குக் கூட ரூ.12 ஆயிரம் செலுத்தி 5 நிமிடத்தில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நிலையத்தை கொழும்பு கொம்பனி வீதியில் (ஸ்லேவ் ஐலண்ட்) குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன், 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. மேலும் காலாவதியான 41 சாரதி அனுமதிப்பத்திரங்களும் இங்கு மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன. மோசடிக்காரர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தில் அசல் சாரதி அனுமதிப்பத்திம் […]

Continue Reading

யாழில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் – நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகை தீபத் திருநாளான இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் குறித்த நிலை நிறுவப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான இன்று காலை 10.30 மணியளவில், இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் […]

Continue Reading

கீரிமலையில் முதியோர் இல்லம் சிவபூமி அமைப்பினால் ஆரம்பம்

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளை யினரால் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் பலரின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் […]

Continue Reading