பெஸ்டியன் துப்பாக்கிச் சூடு: ஐவரிடத்தில் சி.ஐ.டி.யினர் வாக்குமூலம் பதிவு

கொழும்பு,மே 31 பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகில் திங்கட்கிழமை( 30) முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவரிடத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வாவின் கீழான குழுவினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்  முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை

கொழும்பு, ஜுன், 01 எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் செயலாளர் […]

Continue Reading

மின் விநியோக தடை குறித்து வெளியான தகவல்

கொழும்பு,மே 31 நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு தினங்களில் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: பந்துல

கொழும்பு,மே 31 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக பாராளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவமானது உலக பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது சம்பவமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக பாராளுமன்ற வரலாற்றில் […]

Continue Reading

2.2 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கிய பங்களாதேஷ்

பங்களாதேஷ்,மே 31 பங்களாதேஷ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை சந்தித்து, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறித்த மருந்துகளை இன்று (31) கையளித்துள்ளார். 79 வகையான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு தேவையான மருந்துகளும் அவற்றில் அடங்கும்.

Continue Reading

அட்டாளைச்சேனையில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

அட்டாளைச்சேனை,மே 31 அட்டாளைச்சேனையை சேர்ந்த 11 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி S.M.ரிபாஸ்தீன் தனது முகப்புத்தகத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உள்ளதாவது, அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயதான சிறுமியொருவர் தனது குடும்பத்துடன் கடந்த 23 ஆம் திகதி கடற்கரைக்குச் சென்றுள்ளார். இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால், ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க […]

Continue Reading

அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

வாஷிங்டன்,மே 31 அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா நகரத்தில் செயல்பட்டு வருன் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது. திங்கட்கிழமை முதல் பரவத் தொடங்கிய தீ, தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தீ விபத்து என்பதால், மூன்று அலாரம் தீ விபத்து என இந்த தீ விபத்து […]

Continue Reading

இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானம்

கொழும்பு,மே 31 ஹஜ் கடமைகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் இதனைத் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த நாரா நிறுவன தலைவர்

கொழும்பு, ஜூன் 1: நாரா நிறுவனத்தின் ( தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனம்) தலைவர் எம்.ஜெ.எஸ்.விஜயரத்ன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை எடுத்துரைத்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், இன்று நடைபெற்ற இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்காவும் கலந்து கொண்டார்.

Continue Reading

சஷி வீரவன்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை

கொழும்பு,மே 31 குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக அவர் முன் வைத்துள்ள மேன் முறையீட்டை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேன் முறையீட்டு கோரிக்கையை இன்று பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் […]

Continue Reading

சமுர்த்தி பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்த மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்,மே 31 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அரசாங்க அதிபர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.1900, ரூ.3200, ரூ. 4500 பெறுமதியான […]

Continue Reading

3500க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

கொழும்பு,மே 31 நாடளாவிய ரீதியில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இந்நிலையில் 7,000 பேக்கரிகளில் 3500 க்கும் அதிகமான பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். சமையல் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா ஆகியவற்றுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக எதிர்காலத்தில் 90 வீதமான பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக ஜயவர்தன மேலும் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், எமக்கு […]

Continue Reading