அறிமுகமான முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்,மே 29 கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (29) நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் […]

Continue Reading

எதிர்காலத்தில் முட்டை விலை ரூ.50 ஆக உயரலாம்?

கொழும்பு,மே 29 எதிர்காலத்தில், முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்: நாமல்

கொழும்பு,மே 29 நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் தினந்தோறும் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு அற்ற விலைகள் காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதிய இலங்கைக்கு ஏற்ற புதிய அரசியல் கலாச்சாரம் மிகவும் அவசியமானது மற்றும் அத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை நாம் ஆதரிக்க வேண்டும். இப்போது […]

Continue Reading

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய விசேட உரை (முழு இணைப்பு)

கொழும்பு,மே 29 இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம். இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். 20ஆவது […]

Continue Reading

ஓட்டமாவடியில் சோகம்: நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

ஓட்டமாவடி,மே 29 16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை புளியடித்துறை ஆற்றிலேயே இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை (29) இடம்பெற்றுள்ளது. மீராவோடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் எம்.எச்.அர்ஹம் எனும் மாணவன் நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனை கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடி மீட்டெடுத்தனர்.மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக […]

Continue Reading

ஹரீன், மனுஷவுக்கு சஜித் பிரேமதாசவினால் 14 நாட்கள் அவகாசம்

கொழும்பு,மே 29 கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு மன்னிப்புக் கூறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளிட்ட போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 14 நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இந்த தீர்மானம் தொடர்பில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் […]

Continue Reading

மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு,மே 29 உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் டெக்னிக்கல் சந்தி வழியாக பெட்டாவை நோக்கி பேரணியாகச் சென்றது. மருத்துவ பீட மாணவர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை […]

Continue Reading

நானுஓயா புகையிரத நிலையத்தை வந்தடைந்த இந்திய நிவாரணப் பொருள்கள்

கொழும்பு,மே 29 பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பும் தீர்மானத்தை இந்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைவில் முன்வைத்தபோது எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தனர். அதற்கமைய அரிசி, உயிா் காக்கும் மருந்துகள், பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 18ஆம் திகதி சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். இந்நிவாரண பொருட்கள் 22 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன. இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, […]

Continue Reading

ஐபிஎல் நிறைவு விழா: முதல் கோப்பையை வென்ற வீரர்களை கௌரவிக்கும் ராஜஸ்தான் அணி

அகமதாபாத்,மே 29 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி, […]

Continue Reading

தனியார் வங்கியில் 100 பேருக்கு தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை,மே 29 சென்னை தி நகரில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 13 கோடி திடீரென வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்ததாகக் கூறிய வங்கி நிர்வாகம், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்குகளை தற்காலிகமாக முடக்கியது. இந்த நிலையில், புதிய மென்பொருளை எச்.டி.சி.எப்.சி வங்கி சர்வரில் நிறுவியதே குழப்பத்திற்கு காரணம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் […]

Continue Reading

ரயில் பயணிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

கொழும்பு,மே 29 பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளை இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார். பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் […]

Continue Reading

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

புதுடெல்லி, மே 29 “குழந்தைகளுக்கான பிரதம மந்திரி நலத் திட்டம் (பி.எம். கேர்ஸ் திட்டம்)” மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரையிலான காலகட்டத்தில் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக குழந்தைகளை […]

Continue Reading