அரியானா: பஸ் கவிழ்ந்து விபத்தில் 6 பேர் காயம்

சோலன்,ஜுன் 30 சிம்லாவில் இருந்து சண்டிகரை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில், சோலன் மாவட்டத்தில் உள்ள பர்வானூவ் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். விபத்தில் காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை […]

Continue Reading

நிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர முடிவு

ப்ராக்,ஜுன் 30 உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் வடக்கு […]

Continue Reading

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் போராட்டம்

வவுனியா,ஜுன் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ஆம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை […]

Continue Reading

19 வயது இளைஞர் சடலமாக மீட்பு

அம்பாங்குளம்,ஜுன் 30 அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading

நேட்டோ நாடுகள் மீது ரஷியா: சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட்,ஜுன் 30 நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனையடுத்து, நேட்டோ […]

Continue Reading

போலந்தில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்கா,ஜுன் 30 போலந்து நாட்டில் நிரந்தர இராணுவத் தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஸ்பெயினில் இடம்பெற்று வரும் நேட்டோ அமைப்பின் மாநாட்டின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை,வெளிநாட்டு ஊடகங்களை முடக்கும் செயற்பாட்டை இலகுவாக்கும் வகையில் ரஷ்ய நாடாளுமன்றம் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது. யுக்ரேன் மீதான யுத்தத்தின் காரணமாக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் […]

Continue Reading

மேலும் 6 ஆண்டுகள் நியமிக்கப்படும் மத்திய வங்கி ஆளுநர்

கொழும்பு, ஜீன் 30 கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (30) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

Continue Reading

இலவச தொழில் விசா பற்றிய அறிவிப்பு

கொழும்பு,ஜீன் 30 முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, வெள்ளிக்கிழமை முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். இதன்படி, முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விஸா வழங்கப்படவுள்ளது.

Continue Reading

10ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ள முஸ்லீம்கள்

கொழும்பு,ஜுன் 30 இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10ஆம் திகதி கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Continue Reading

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ: 135 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசம்

அமெரிக்கா,ஜுன் 30 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. இந்த காட்டுத்தீயால் கலிபோர்னியாவின் வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலமாகவும் காட்சியளிக்கின்றன. காடுகள் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், இதுவரை 75 சதவீத காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

வாகன ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 30 மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரம் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 4 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

கந்தகாடு கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

கந்தகாடு,ஜுன் 30 கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ததன் பின்னர், பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொலன்னறுவை, அனுராதபுரம், தும்பறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு, ஊடகப் பேச்சாளர்) திரு.சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Continue Reading