உலகின் மிக பெரிய தாவரம் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியா,ஜுன் 01 அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மிகப்பெரிய தாவரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Manhattan எனும் தாவரத்தை விட 3 மடங்கு பெரிய தாவரமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாவரம் 4 ஆயிரத்து 500 வருடங்களுக்கு அதிகமான காலத்திற்கும் பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய அதிபர்? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு

ரஷ்யா,ஜுன் 01 பிரித்தானிய உளவு நிறுவனமான எம்ஐ6, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் இறந்துவிட்டதாகப் புதிய தகவலைக் கசிய விட்டுள்ளது. புதினுக்குப் புற்றுநோய், அறுவை சிகிச்சையால் அவதிப்படுகிறார் என்றெல்லாம் அண்மைக்காலமாக செய்திகள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் மத்தியில், புதின் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அவரின் மறைவு குறித்த தகவல்களை ரஷ்யா மறைத்து வருவதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் ரஷ்ய […]

Continue Reading

மிருசுவிலில் காணாமல் போன சிறுமி மீட்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 01 யாழ்ப்பாணம் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் இன்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையிவல் சுமார் ஒரு மணி நேர தேடுதலின் பின் சிறுமி மீட்கப்பட்டார். வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

இலங்கைக்கு உரம் வழங்க இந்திய பிரதமர் இணக்கம்

கொழும்பு,ஜுன் 01 இந்திய கடன் திட்டத்தின் கீழ் யால பருவத்திற்கான உரங்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விஷேட கூட்டம் இன்று

கொழும்பு,ஜுன் 02 நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றியக்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று புதன்கிழமை (02) முற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு வேளை தொடர்பிலும் இதன்போது தீர்மானம் ஒன்று எட்;டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகாரங்களையும், வளங்களையும் பெற்றுக் கொடுக்க தயார்: ஜனாதிபதி

கொழும்பு,ஜுன் 01 தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த முன்மொழிவுகள் புதன்கிழமை (01) முற்பகல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் […]

Continue Reading

வரி அதிகரிக்கப்பட்ட பொருட்களின் முழு விபரம்

கொழும்பு,ஜுன் 01 இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 369 அத்தியாவசிய பொருட்களை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

நாட்டு நிலமை: புதுமையாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு,ஜுன் 01 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று (01) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசஉத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் அலுவலகத்திற்கு சமூகமளித்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாமல் நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது. இந்நிலைமைகளுக்கு மத்தியில் […]

Continue Reading

மின்சார சபையை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

கொழும்பு,ஜுன் 01 இலங்கை மின்சார சபைக்கு பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றக் (கோப்) குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினை எதிர்வரும் 7 ஆம் திகதி பொது நிர்வாகங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

காலி முகத்திடல் போராட்டத்தில் யாழ்ப்பாண நூலக எரிப்பை எதிர்த்து பேரணி

கொழும்பு,ஜுன் 01 1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இப் பேரணியில் பெருமளவான இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ”அரச ஆதரவாளர்களால் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்” என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு இப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் […]

Continue Reading

யூரியா உரத்தினை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு

கொழும்பு,ஜுன் 01 பெரும்போக நெற்செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில்,  விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த காலங்களில்  நெற்செய்கைக்கான […]

Continue Reading

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இந்தியா,ஜுன் 01 பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றிய போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை […]

Continue Reading