வெள்ளிக்கிழமை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 02 நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (03) முதல் இரவு நேரத்திலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசிய பராமரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில், இரவு நேரங்களில் மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, வியாழன்,வெள்ளியும் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, A முதல் Q வரையான […]

Continue Reading

வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

கொழும்பு,ஜுன் 02 வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவிற்கும்,  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே இதற்காக அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது என ஜுலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, இலங்கையில் முதலீட்டை அதிகரித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை […]

Continue Reading

அனுர- சீன தூதர் சந்திப்பு

கொழும்பு,ஜுன் 02 மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் இடையே வியாழக்கிழமை (02) சந்திப்பொன்று இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.நாட்டில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் விளம்பரச் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் […]

Continue Reading

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

அநுராதபுரம்,ஜுன் 02 இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் அநுராதபுரத்தில் 13 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பாலின சுகாதார சேவைகள் நிலையத்தின் வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம, ஹொரவப்பொத்தானை, மத்திய நுவரகம் மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாகவே எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான […]

Continue Reading

​பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு,ஜுன் 02 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையினால் மத்திய மலைநாட்டை அண்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா, மாத்தளை குருநாகல் மாவட்டங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலை மற்றும் […]

Continue Reading

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

கொழும்பு,ஜுன் 02 இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்து 483 பேர் கடந்த மே மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதன்கிழமை […]

Continue Reading

ஜனாதிபதியை சந்தித்த புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி

கொழும்பு,ஜுன் 02 புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) சந்தித்துள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதேநேரம், புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவும் ஜனாதிபதியை சந்தித்தார். உரிய பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முப்படைகளின் தலைவர், ஜனாதிபதியை சந்திப்பது சம்பிரதாயப்பூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading

திருமணத்திற்காக படிப்பை கைவிடுமாறு வற்புறுத்தியதால் 19 வயது சிறுமி தற்கொலை

லக்னோ,ஜுன் 22 உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 19 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் காலனியைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 19). பிரியங்காவுக்கு உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், 4 சகோதரிகள். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். பிரியங்கா இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் சேர இருந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் […]

Continue Reading

துருக்கி நாட்டின் பெயர் துருக்கியே என மாற்றம்

துருக்கி,ஜுன் 02 துருக்கி தமது நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றியுள்ளது. அங்காராவின் கோரிக்கைக்கு அமைய, ஐக்கிய நாடுகள் சபை இதனை அங்கீகரித்து உறுதிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான துருக்கியர்கள் ஏற்கனவே தங்கள் நாட்டை துருக்கியே என்று அறிந்திருக்கிறார்கள். துருக்கிய மக்களின் கலாசாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடாக துருக்கியே உள்ளதென அந்த நாட்டு ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகான் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

Continue Reading

தாய்வான்-அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு

சீனா,ஜுன் 02 தாய்வான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சீனா முழுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன், தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், குறித்த நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலேயே தாய்வானுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய நாடுகள் தாய்வானுடன் மேற்கொள்ள முயற்சிக்கும் எந்தவொரு உத்தியோகபூர்வ தொடர்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் […]

Continue Reading

இரத்தினபுரியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

இரத்தினபுரி,ஜுன் 02 இரத்தினபுரி, எலபாத மஹிரகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.பலியானவர் 27 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவநதுள்ளது. எலபாத பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் […]

Continue Reading

பெர்னாண்டோவை தேடி குருநாகல் மற்றும் கொழும்புக்கு விரைந்த CID

கொழும்பு,ஜுன் 02 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் வன்முறைச் சம்பத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் புதன்கிழமை (01) சந்தேகநபர்களாக பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading