ரஷ்யாவுடனான போரில் தனது நாடு வெற்றி பெறும் என உக்ரைன் ஜனாதிபதி உறுதி
உக்ரைன்,ஜுன் 03 ரஷ்யாவுடனான போரில் தனது நாடு வெற்றி பெறும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர்ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்த நடவடிக்கை ஆரம்பித்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து கடந்த 100 நாட்களாக தமது நாட்டைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உக்ரைனின் ஆயுதப் படையினரும், நாட்டு மக்களும் தமது பக்கம் உறுதுணையாகசெயற்படுவதாகவும் யுக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Continue Reading