துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி

அஹங்கம, ஜூன் 04 அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பன்சாலிய பகுதியில் இன்று மாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 27 வயதுடைய இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து சிறுவன் பலி

கிளி, ஜூன் 04 கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசனகால்வாயில் ஒன்றரை வயதுநிசாந்தன் சபீசன் என்ற சிறுவன்விழுந்து பலியாகியுள்ளார். இந்த்ச் சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நீர் பாசன கால்வாயில் விழுந்த சிறுவன் சம்பவ இடத்தில்இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்நீரில் இழுத்துச் சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் உடலை மிட்டுகிளிநொச்சி வைத்தியசாலையில்உடல் கூற்று விசாரணைக்குவைக்கப்படுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சிபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Continue Reading

சாய்ந்தமருது பகுதியில் விழிப்பூட்டல் செயல்திட்டம்

சாய்ந்தமருது, ஜுன் 4 கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (4) முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இப் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்படுவதால் தங்களது வீட்டை சுற்றிலும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நியாஸ் […]

Continue Reading

இராஜதந்திர முறையில் தீர்க்கவேண்டிய பிரச்சினை பாரிய அளவில் உருவெடுப்பு: சஜித்

கொழும்பு, ஜூன் 04 நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை தற்போது பாரிய அளவில் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இல்லாமலாக்கிக் கொள்ளவும், நாட்டின் தேயிலையை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளவுமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், […]

Continue Reading

களுபோவில வீதியை மறித்து மக்கள் போராட்டம்

களுபோவில, ஜூன் 04 தமக்கான மண்ணெண்ணையை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி கொகுவல களுபோவில வீதியை மறித்து வீதிமறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. களுபோவில எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்ப்பட்டு வருகின்றது. போராட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

யாழில் போதை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி

கொழும்பு, ஜூன் 04 யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, மீண்டும் திரும்பிய யுவதி வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் நிலத்தில் வீழ்ந்துள்ளார். இந்நிலையில் பதறியடித்த தாயார் மயக்கமுற்று வீழ்ந்த மகளை முச்சக்கர வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி […]

Continue Reading

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம்

கொழும்பு,ஜுன் 04 நாட்டில் முறையற்ற எரிபொருள் விநியோகம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடிய மண்ணெண்ணெய் தமது கையிருப்பில் இல்லை என்றும் ஆனந்த பாலித தெரிவித்தார். கையிருப்பில் உள்ள மண்ணெண்ணெய்யை விநியோகிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆனந்த பாலித குற்றம் சுமத்தினார். மேலும் லஞ்சம் மற்றும் கமிஷன் அடிப்படையில் […]

Continue Reading

விற்றுத் தீர்ந்த டிக்கெட்

கொழும்பு,ஜுன் 04 அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது ரி20 போட்டி 9 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச […]

Continue Reading

விபத்தில் இளைஞன் பலி

கொழும்பு,ஜுன் 04 வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக நொச்சிமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஏ9 வீதியில் வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர்ப்பக்கம் சென்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், […]

Continue Reading

தமிழக முதல்வரை சந்தித்த மிலிந்த மொரகொட

சென்னை, ஜுன் 04 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு சென்னையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

இருளில் தவிக்கும் கிழக்கு உக்ரைன்: எரிவாயு, மின்சாரம், தண்ணீர் இன்றி பொதுமக்கள் சிரமம்

கீவ்,ஜுன் 04 உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீத உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதன் காரணமாக தண்ணீரை பல கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]

Continue Reading

பிரேசிலில் கனமழை: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

ரியோ டி ஜெனீரோ, ஜுன் 04 பிரேசில் நாட்டில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்து உள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதேபோன்று, கனமழையால் நில சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் […]

Continue Reading