வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

கொழும்பு, ஜூன் 6: 2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிட்டால் தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார். […]

Continue Reading

பிரெஞ்சு ஓபனில் அசத்தல்- 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ரபேல் நடால்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். […]

Continue Reading

இந்திய பிரஜை இலங்கையில் கைது

கொழும்பு, ஜூன் 6: 117,000 கனேடிய டொலர், 19,000 யூரோவை பயணப் பொதிக்குள் கொண்டுசெல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சென்னை நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading

பயன்தரு மரங்கள் விஷமிகளால் எரிப்பு

நமது நிருபர் கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன் தருகின்ற தருவாயில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் பல தென்ணைகள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீப்பரவல் தொடர்பாக பிரதேசவாசிகள் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரிவித்ததை அடுத்து கரைச்சி பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். […]

Continue Reading

வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு 5 வருட விடுமுறை

கொழும்பு, ஜுன் 05 வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் . அரச உத்தியோகத்தர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சகல சலுகைகளுடனும் அவர்களது சேவைக்கால தரங்களை மீளப் பெறுவார்கள். இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும் இத்திட்டம் […]

Continue Reading

பொலிவுட் பிரபலங்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர்

கொழும்பு, ஜுன் 05 இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பொலிவுட் நடிகர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ சந்தித்துள்ளார். பொலிவுட் நடிகை சித்ரங்டா சிங் மற்றும் டினோ மொரியா ஆகியோர் இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, இந்திய சினிமா காட்சிகளுக்காக இலங்கையில் படப்பிடிப்புகளை மேற்கொள்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Continue Reading

பஸ் சேவைகள் நாளை முற்றாக ஈடுபடாது

கொழும்பு, ஜுன் 05 பஸ்கள் நாளை (06) முழுமையாக சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

தமிழருக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்து தியாகி சிவகுமாரன் போராடினார்: வலி கிழக்கு தவிசாளர்

யாழ், ஜுன் 05 தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது. அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் […]

Continue Reading

லாஃப் எரிவாயு கொள்கலன் விலை அதிகரிப்பு

கொழும்பு, ஜுன் 05 லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3500 மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Continue Reading

இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றோம்: ரணில்

கொழும்பு, ஜுன் 05 இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அண்டை நாடான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு ஏனைய நாடுகள் முன்வந்துள்ள போதிலும், இந்தியா ஏற்கனவே இலங்கைக்காக பலவற்றை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் […]

Continue Reading

யாழ் .திக்கம் பகுதியில் கஞ்சாவுடன் மூவர் கைது

பருத்தித்துறை, ஜுன் 05 யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.  குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திக்கம் , தும்பளை மற்றும் பலாலி அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் , அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி

யாழ், ஜுன் 05 யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இவ் மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்தார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணைத் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க […]

Continue Reading