சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

கொழும்பு, ஜுன் 07 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000 என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

செவ்வாய்க்கிழமை மின்வெட்டு தொடர்பான அட்டவணை

கொழும்பு, ஜுன் 06 நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 2 மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ((PUCSL)) அறிவித்துள்ளது.

Continue Reading

அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஷ்வர்,ஜுன் 06 அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத்தாக்கியது. 1 டன் அணு ஆயுதங்களை ஏந்திச்சென்ற 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்லது அக்னி-4 ஏவுகணை. அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அக்னி-4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் […]

Continue Reading

திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது

கொழும்பு,ஜுன் 06 பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சியின் மகன்  மற்றும் அவரது மருமகள் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவிந்து வெதாராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்திருந்தனர். இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை தடுத்துள்ளனர்.எனினும், சந்தேகநபர்கள்  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். அதன்படி இன்று வீரகெட்டிய பொலிஸில் சரணடைந்த ரவிந்து வெதஆராச்சி மற்றும் […]

Continue Reading

ஜோன்ஸ்டனை கைது செய்ய களத்தில் இறங்கிய சிஐடியினர்

கொழும்பு,ஜுன் 06 மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்  பிரதமர் மஹிந்தவின் இணைப்பு செயலாளர் ஒருவரே இவ்வாறு கொழும்பில் வைத்து சிஐடி.யினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இதேவேளை, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய பல  சிஐடி […]

Continue Reading

போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய உக்ரைன் அதிபர்

கீவ்,மே 06 உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல் நீடித்து போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி சண்டை நடைபெறும் போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொன்பாஸ் நகரில் உள்ள படைகளை சந்தித்து பேசினார். ரஷிய படைகள் ஆக்ரோசமுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிழக்கு பகுதியில் அமைந்த தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் ராணுவ முகாம்களுக்கு சென்றார். இதேபோன்று, சிவர்ஸ்கை டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே அமைந்த லிசிசன்ஸ்க் பகுதிக்கும் […]

Continue Reading

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: ஜனாதிபதி

கொழும்பு,ஜுன் 06 அடுத்த இரண்டு வருடங்களுக்கு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

ரஷ்யாவிற்கான தபால் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு,ஜுன் 06 இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு வர்த்தக […]

Continue Reading

ஓமானிலிருந்து இலங்கைக்கு நேரடியாக யூரியா அனுப்ப இந்தியா நடவடிக்கை

கொழும்பு,ஜுன் 06 ஓமானில் இருந்து நேரடியாக இலங்கைக்கு யூரியா உரத்தை அனுப்பி வைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கு 65, 000 மெட்ரிக் டன் யூரியாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த தொகுதி ஓமானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நேரடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை […]

Continue Reading

பிரித்தானிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

பிரித்தானியா,ஜுன் 06 பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(06) இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 க்கு நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முடக்க செயற்பாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் தமது ஆதரவை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 06 வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இணையத்தளத்தில் எதிர்காலத்தில் உரிய தொழில் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Continue Reading

முன்னாள் பிரதமரின் இணைப்பு செயலாளர் விளக்கமறியலில்

கொழும்பு,ஜுன் 06 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த விசாரணைகளுக்கமைய, சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட தங்காலையைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த, 53 வயதான நபரொருவர், இன்று(6) காலை கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார். கைதான சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, […]

Continue Reading