கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது தொடர்பாக டக்ளஸ் ஆய்வு

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது  பங்கதெனியவில் நக்டா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை, கொடுவா உட்பட்ட கடலுணவுகளுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை வினைத் திறனுடன் செயற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் […]

Continue Reading

ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை கடக்கும் சுற்றுலா பயணிகள்

இந்தியா,ஜுன் 07 துபாரேயில் யானைகள் முகாமுக்கு செல்ல ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை சுற்றுலா பயணிகள் கடந்து செல்கிறார்கள். இதனால் அங்கு தொங்குப்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடகிற்கு வந்து செல்கிறார்கள். குடகில் துபாரே, […]

Continue Reading

புதன்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையில் மாற்றம்

கொழும்பு, ஜுன் 07 நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி மூன்று நாட்களுக்கு பகல் வேளையிலும் இரவு வேளையிலும் என மாறி மாறி மின்சாரத்தை துண்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு பகலில் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவில் துண்டிக்கப்படும்.குறித்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் […]

Continue Reading

வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களை திருடியவர் கைது

யாழ்ப்பாணம்,ஜுன் 07 மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து அங்கிருந்த சலவை இயந்திரம், வளிச்சீராக்கி (ஏசி) சிசிரிவி கமரா உள்ளிட்ட 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் […]

Continue Reading

மத்திய பிரதேசம்: குழந்தைகளுக்கு இடையேயான மோதலில் ஒரு பெண் சுட்டுக்கொலை

இந்தூர்,ஜுன் 07 மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சந்தன்நகர் பகுதியில் குழந்தைகள் இரு குழுக்களாக பிரிந்து மோதி கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்து, தாக்கி கொண்டனர். இதனை கவனித்த அந்த குழந்தைகளின் பெற்றோர், அவர்களை விலக்கி விடுவதற்கு பதிலாக அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் பெற்றோரில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வந்து பெண் ஒருவரை நோக்கி சுட்டுள்ளார். அதன்பின் தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் அந்த பெண் பலத்த காயமடைந்து உள்ளார். […]

Continue Reading

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 07 இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலோ அல்லது www.dome.lk என்ற இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

Continue Reading

யாழ் கோண்டாவிலில் கோர விபத்து: ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம்,ஜுன் 07 யாழ்ப்பாணம், கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு மோட்டர்சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

அவுஸ்திரேலிய அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

கொழும்பு,ஜுன் 07 இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 129 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் […]

Continue Reading

ரூபா வீழ்ச்சியடைவதை தடுக்கும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளது: மத்திய வங்கி

கொழும்பு,ஜுன் 07 நாணய மாற்று விகிதங்களை மாற்றியமைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து ரூபாவின் மேலும் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலைமை சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், ரூபாயின் நெகிழ்வுத்தன்மை, ‘நெகிழ்வான மாற்று விகிதத்தை’ கடுமையாக வீழ்ச்சியடையச் செய்ததாக மத்திய வங்கி அறிவித்தது.

Continue Reading

நாட்டில் எரிபொருளை பெற்று கொள்ள முண்டியடிக்கும் மக்கள்

யாழ்ப்பாணம்,ஜுன் 07 இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தில் மக்கள் பல இடங்களில் முண்டியடித்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டில் நள்ளிரவு முதல் […]

Continue Reading

புனித மக்காவுக்கான யாத்திரை தொடர்பில் முக்கிய தீர்மானம்

கொழும்பு,ஜுன் 07 அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்கள் புனித மக்காவுக்கான யாத்திரையை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

13 வயது சிறுமியை மூன்று நாட்களாக காணவில்லை

கொஸ்கம,ஜுன் 07 கொஸ்கம, சாலாவ தோட்டத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமி கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானம் இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தாய் பொலிஸில் புகாரளித்துள்ளார்.இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொஸ்கம பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் […]

Continue Reading