புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

அமெரிக்கா,ஜுன் 08 அமெரிக்காவின் மன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவீதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து […]

Continue Reading

இயக்கச்சியை வந்தடைந்த பாதயாத்திரை

யாழ்ப்பாணம்,ஜுன் 08 தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் புதன்கிழமை இயக்கச்சி பகுதியை வந்தடைந்தனர். வருடந்தோறும் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்கள் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள கோவில்கள், மண்டபங்கள் பொது இடங்களில் தங்கி தமது வழிபாடுகளை மேற்கொண்டு கதிர்காமத்தை சென்றடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்த 53 பக்தர்கள் இன்றைய தினம் இயக்கச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் 552 இரண்டாவது படைப்பிரிவின் தலைமையகத்தில் தங்கிச் சென்றனர். இதன்போது பக்தர்களுக்கு தேவையான விருந்துபசாரம் […]

Continue Reading

2 ஆவது இருபதுக்கு20 போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி

கொழும்பு,ஜுன் 08 இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து, இலங்கையை துடுப்பாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு […]

Continue Reading

பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு இல்லை: இரு தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு

கொழும்பு,ஜுன் 08 இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று நள்ளிரவில் ஆரம்பிக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கம் மற்றும் சுயாதீன பொறியியலாளர் சங்கம் ஆகியன தெரிவிக்கின்றன. இதேவேளை, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பல தொழிற்சங்கங்கள் இன்று(08) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. மின்சார சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Continue Reading

வியாழக்கிழமை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 08 நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி மூன்று நாட்களுக்கு பகல் வேளையிலும் இரவு வேளையிலும் என மாறி மாறி மின்சாரத்தை துண்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு பகலில் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவில் துண்டிக்கப்படும்.குறித்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் […]

Continue Reading

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பலத்த மழை: நகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

பெய்ஜிங்,ஜுன் 08 மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகர்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் 1.3 மீட்டர் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். தீயணைப்புத்துறையினர் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஹெனான் மாகாணத்தின் ஷாவ்கான் பகுதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் கனமழைக்கான எச்சரிக்கை […]

Continue Reading

யாழ். போதனா வைத்தியசாலையில் திருடப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 08 கடந்த மே மாதம் யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ் போதனா வைத்தியசாலை பின் வீதியில் திருடப்பட்ட பச்சைநிற முச்சக்கரவண்டி பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் விசேட அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது […]

Continue Reading

இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான உணவுப்பொருட்கள் விநியோகம்

கொழும்பு,ஜுன் 08 இந்திய அரசின் உதவித்திட்டத்திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறும் 450000 கிலோகிராம் அரிசி  உணவு ஆணையாளர் திணைக்களம் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை  யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ள  இவ் உதவித்திட்டமானது 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த 45000 குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கற்பிட்டி இழுவை வலை மீனவர்களுக்கு நியாயமான தீர்வு: கடற்தொழில் அமைச்சர் உறுதி

யாழ்ப்பாணம், ஜூன் 9: கற்பிட்டி பிரதேசத்தில் பாரம்பரியமாக இழுவை வலைத் தொழில் முறையைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு அமைச்சரவை பத்திரத்தின் மூலம் நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கற்பிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்த நிலையில், மேற்குறித்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும, சிறு கடற்றொழிலாளர்களுக்கோ, இயற்கை வளங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத […]

Continue Reading

விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்க நடவடிக்கை

கொழும்பு,ஜுன் 08 விதை நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு தேவையான 2022 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்திற்குட்பட்ட 9 மாகாணங்களிலும் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள 6,774.3 ஹெக்டேர் விவசாய காணிக்கு உரம் வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இரசாயன உரம் கிடைக்காமையால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். அதற்கமைய, 2022 / 2023 ஆண்டிற்கான பெரும்போகத்திற்கு தேவையான தரமான விதை நெல்லை பெற்றுக்கொள்வதற்காக, இரசாயன உரத்தை […]

Continue Reading

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கும் இ.மி.ச

கொழும்பு,ஜுன் 08 மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி இன்று (08) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (09) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று இரவு 12 மணி முதல் நாங்கள் அனைவரும் வேலை […]

Continue Reading

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு,ஜுன் 08 எதிர்காலத்தில் 22,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020 பட்டமளிப்புத் திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Continue Reading