வெள்ளிக்கிழமை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 09 நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி மூன்று நாட்களுக்கு பகல் வேளையிலும் இரவு வேளையிலும் என மாறி மாறி மின்சாரத்தை துண்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு பகலில் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவில் துண்டிக்கப்படும்.குறித்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். […]

Continue Reading

இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேசத்தின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்: ஜனாதிபதி

கொழும்பு,ஜுன் 09 நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகமானது உலகின் அனைத்து முன்னணி கப்பல் நிறுவனங்களுடனும் இயங்குகிறது. நிர்வாக சபை உட்பட முழு ஊழியர்களும் பொறுப்புடன் செயற்பட்டு […]

Continue Reading

வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் விழுவதால் கடும் அவதி

கோவை,ஜுன் 09 தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது கழிவுகள் கீழே விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தடுப்புகள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதை கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சுரங்கப்பாதை செல்கிறது. இதில் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. இதற்காக அங்கு ராட்சத இரும்பினால் ஆன […]

Continue Reading

வரலாறு காணாத மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,ஜுன் 09 பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன. […]

Continue Reading

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு,ஜுன் 09 ஜுன் மாதம் கடந்த 8 நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,622 சந்தேகத்திற்கிடமான மற்றும் சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காலை 7.00 மணி வரை பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 25 பேர் டெங்கு மற்றும் ஏனைய நோய்களின் தீவிரத்தினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களில் 8 பேர் 5 முதல் 20 வயதுக்கு […]

Continue Reading

மின்சக்தி திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்: ஜனாதிபதி பாராட்டு

கொழும்பு,ஜுன் 09 நாட்டில் 70 வீதம் என்ற அளவில் புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் பாராளுமன்றில் வியாழக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சட்டமூலம் நிறைவேறியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தை செயல்படுத்தும் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு புதிய வழிகளைத் திறக்கும் மற்றும் இலங்கையில் உள்ள மின் நெருக்கடிக்கு ஒரு […]

Continue Reading

இலங்கைக்கு உதவ உலக மக்களிடம் கோரிக்கை வைத்த கிரிக்கெட் வீரர்கள்

கொழும்பு,ஜுன் 09 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள தமது ரசிகர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் […]

Continue Reading

இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும்: சித்தார்த்தன்

யாழ்ப்பாணம்,ஜுன் 09 வடக்கிலே காற்றலை மின்னுற்பத்தித் திட்டத்தை முன்னெடுக்குபோது, அதன்மூலம் ஏற்படும் இலாபத்தின் ஒரு பகுதியை, அந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு ஒதுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற மின்சக்தி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இதேநேரம், பெருந்தோட்டத் தரிசு நிலங்களை, மக்களுக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் எடுத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

யாழில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழ்ப்பாணம்,ஜுன் 09 யாழ்ப்பாணம், அரியாலையில் புகையிரத விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று(9) மாலை இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்பட்ட இரவு புகையிரதம், அரியாலை, மாம்பழம் சந்தியில் கார் ஒன்றுடன் விபத்திற்குள்ளானது. காரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

அடுத்த ஆண்டில் கடும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை

நியூயார்க்,ஜுன் 09 ஐ.நா-வின் உலகளாவிய நெருக்கடி பதில் குழுவின் அறிக்கை புதன்கிழமை வெளியானது. அதில், 2023-ல் பெரும் உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், அதைத் தடுக்க நம்மிடம் நேரம் குறைவாக உள்ளதாகவும் அந்த ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது. உக்ரைன் ரஷியா போரால், உணவு பாதுகாப்பு, ஆற்றல், எரிசக்தி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கை நேற்று வெளியானது. அதன்படி, உக்ரைனில் நடந்த போரால் 94 நாடுகளில் குறைந்தது 1.6 பில்லியன் மக்கள் நிதி, […]

Continue Reading

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

கொழும்பு, ஜுன் 09 நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார். சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண […]

Continue Reading

நீதிமன்றில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பிணையில் விடுவிப்பு

கொழும்பு,ஜுன் 09 கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் இவ்வாறு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணடைந்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று(09) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹரகமையில் அமைந்துள்ள […]

Continue Reading