இலங்கையில் வரலாறு காணாத மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

கொழும்பு, ஜூன் 10: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செலுத்த வேண்டிய நிதி நிலுவை 51 […]

Continue Reading

தேசியப் பட்டியல் எம்பியாக தம்மிக்க பெரேரா நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

கொழும்பு, ஜூன் 10: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் கையளிக்கப்பட்டது. நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க […]

Continue Reading

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகள்- கடற்தொழில் அமைச்சர் சந்திப்பு

கொழும்பு, ஜூன் 10: லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற பல நாள் கலன்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சீராக தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று முன்தினம் […]

Continue Reading

யூரியா இறக்குமதி செய்ய கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு, ஜூன் 10: யூரியா இறக்குமதி செய்வதற்காக இந்திய எக்ஸிம் வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் இந்த கடன் வசதி கோரப்பட்டுள்ளது. சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த கடனுதவி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, யூரியா உரம் கொள்வனவு செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

Continue Reading

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

கொழும்பு, ஜூன் 10: லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜித ஹேரத் அறிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார். இந்நிலையில், அப்பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Continue Reading

நுவரெலியா வாவியில் கைக்குண்டு மீட்பு

நுவரெலியா, ஜூன் 10: நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன்) இருந்து குறித்த  கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த வாவி பகுதியில் மேற்கொள்ள சோதனையில் பாதுகாப்பு பிரிவினால் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா காவல்துறையினர். தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த […]

Continue Reading

திங்கள்கிழமை விசேட அரச விடுமுறை

கொழும்பு, ஜூன் 10: எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Continue Reading

உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும்: பிரதமர்

கொழும்பு, ஜூன் 10: பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் உணவுத் […]

Continue Reading

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 மாணவர்கள் காயம்

யாழ்ப்பாணம், ஜூன் 11: யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்கள் ஆசிரியர்கள் நின்றிருந்த வேலை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

கொழும்பு, ஜூன் 10 இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து நாட்டின் பல பாகங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Continue Reading

யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை

யாழ், ஜுன் 10 யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் […]

Continue Reading

மன்னாரில் வாள் வெட்டு: இருவர் பலி

மன்னார், ஜூன் 10 மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், படுகாயமடைந்த நால்வர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading