ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை

கொழும்பு,ஜுன் 11 நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் மின்வெட்டு அமல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை

Continue Reading

3வது டி20 போட்டி: சனகா அதிரடி- 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி

கொழும்பு,ஜுன் 11 இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வேர்னர் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டேனிஸ் 38 ஓட்டங்களையும் […]

Continue Reading

மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் பலி: உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்,ஜுன் 11 ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது. இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ரஷியா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை. தற்காலிகமாக […]

Continue Reading

போர் தொடுக்க தயங்க மாட்டோம்: அமெரிக்காவிடம் சீனா பகிரங்க எச்சரிக்கை

பெய்ஜிங்,ஜுன் 11 சிங்கப்பூரில் அமெரிக்கா, சீனா இடையே பிராந்திய அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன பாதுகாப்புத்துறை மந்திரி வே வெய் ஃபென்கே மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்க முயன்றால், சீன ராணுவம் போர் தொடுக்க தயங்காது என்று வெய் ஃபென்கே எச்சரித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மறுபுறம், பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் இருந்து சீனா விலகியிருக்க வேண்டும் […]

Continue Reading

இந்தியாவில் 195 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: சுகாதாரத்துறை

புதுடெல்லி,ஜுன் 11 நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 195 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்களப் பணியாளர்கள் மற்றும் […]

Continue Reading

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் ரூ.100 மில்லியன்

மத்தள,ஜுன் 11 மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் சனிக்கிழமை மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார். இந்நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Continue Reading

யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 11 யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ஐந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு […]

Continue Reading

60 லீற்றர் டீசலுடன் பெண் கைது

லுணுகலை,ஜுன் 11 லுணுகலை பகுதியில் 60 L டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி CI சாமிந்த தலைமையிலான குழுவினர் டீசல் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் இடத்தில் தேடுதலை மேற்கொண்ட போது டீசல் நிரப்பப்பட்ட 20 லீற்றர் நிரப்பிய கொள்கலன்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இச் சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதோடு குறித்த சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுவித்ததோடு […]

Continue Reading

11ஆவது இந்துக்களின் பெரும்சமர் சமநிலையில் முடிவு

யாழ்ப்பாணம்,ஜுன் 11 இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் தொடர்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன. இப்போட்டியில் நாணையச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 59.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் […]

Continue Reading

இலங்கை அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

கொழும்பு,ஜுன் 11 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு 177 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 176ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 37 […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு உணவு தட்டுப்பாடு?

கொழும்பு,ஜுன் 11 இலங்கையில் சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்மையை எதிர்நோக்க நேரிடும் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலுள்ள பல பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டதின் கீழ் அரசுடன் இணைந்து சேவ் த சில்ரன் […]

Continue Reading

பாடசாலைகளில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்க ஆலோசனை

கொழும்பு,ஜுன் 11 பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் உட்பட அனைத்து மதஸ்தலங்களிலும் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஆசோசனைகளை வழங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வீட்டுத் தோட்டம் என்ற எண்ணக்கருவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற அத்தியாவசிய பயிர்களை பயிரிட்டு அதனூடாக மக்களின் தேவைகளுக்கு பங்களிப்பு வழங்கவுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் […]

Continue Reading