அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மக்கள் பிரமாண்ட பேரணி

வாஷிங்டன்,ஜுன் 12 அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. […]

Continue Reading

பாம்பு கடிக்கு இலக்காகி 15 வயது மாணவன் உயிரிழப்பு

அனுராதபுரம்,ஜுன் 12 அனுராதபுர பிரதேசத்தில் விரியன் (புடையன்) பாம்பு கடிக்கு இலக்காகி 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளான். பாம்புக்கடிக்கு இலக்கானவர்களுக்கு வழங்கப்படும் விஷமுறிவு மருந்துக்கு பின் கொடுக்கப்பட வேண்டிய அலர்ஜி தவிர்ப்பு மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் குறித்த மருந்து கைவசம் இல்லாத நிலையில், சுமார் 48 மருந்தகங்களில் முயன்றும் குறித்த மருந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மாணவன் பரிதாபகரமாக மரணத்தை தழுவிக் கொண்டுள்ளான் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

யாழில் இன்றும் விசேட சோதனை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 12 யாழில் விடுமுறை தினமாகிய இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து ஞாயிற்றுகிழமை பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான்-ஹூய் நியமனம்

சியோல்,ஜுன் 12 வடகொரியாவின் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடகொரியாவில் இந்த பதவியை பெரும் முதல் பெண் என்ற பெருமையை சோ சான்-ஹூய் பெற்றுள்ளார். வெளியுறவுத் துறை இணை மந்திரியாக ஏற்கெனவே பணியாற்றியுள்ள இவர் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார். அதிபர் கிம் ஜாங் உன்-னின் நெருங்கிய உதவியாளராக இருந்த இவருக்கு தூதரகப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் உள்ளது. தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான் […]

Continue Reading

கைவிடப்பட்ட காணிகள் குறித்து விவசாய அமைச்சரின் அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 12 நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

Continue Reading

ரயிலில் இருந்து சடலம் மீட்பு

ரம்புக்கனை,ஜுன் 12 ரம்புக்கனையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி புறப்பட தயாராகவிருந்த ரயில் ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் கழுத்து பகுதியில் காயமொன்று காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். ரம்புக்னை ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட தயாராகவிருந்த புகையிரதத்தின் 3ஆம் வகுப்பு பெட்டியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]

Continue Reading

அவுஸ்ரேலியாவினால் இலங்கைக்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்வு

கொழும்பு,ஜுன் 12 இலங்கையின் தற்போதைய நிலைமையில் அவுஸ்ரேலியாவினால் உதவக்கூடிய வழிகள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் பீரிஸ் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,  இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதில் […]

Continue Reading

5 வருடங்களுக்குள் நாட்டை கட்டியெழுப்ப தயார்: சஜித்

கொழும்பு,ஜீன் 12 ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டை அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாங்கள் நாட்டை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பிரதேச சபை தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

நுவரெலியா,ஜுன் 12 நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தப்பளை, கொங்கோடியா தோட்டத்தின் 90 பேர்ச் காணி விவகாரம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபைக்கு தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. குறித்த காணி அரசாங்கத்தால் நுவரெலியா பிரதேச சபக்கு வழங்கப்பட்டிருந்தது. அக்காணியை சபை தலைவர் வேலு யோகராஜா முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

Continue Reading

இதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது: பசில்

கொழும்பு,ஜுன் 12 இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம். எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது சுயவிருப்பத்தின் பிரகாரமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தேன். எவரினதும் அழுத்தங்களால் எனது எம்.பி. பதவியை நான் […]

Continue Reading

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற டிஜிட்டல் முறையிலான ஏலம் தொடங்கியது

மும்பை,ஜுன் 12 2023 முதல் 2027 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிறைவடைந்த 15-வது ஐ.பி.எல். தொடருடன் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமமும் முடிவுக்கு வந்தது. 2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த […]

Continue Reading

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு: காதலனை கார் ஏற்றி கொன்ற காதலி

வாஷிங்டன், ஜுன் 12 அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்த காதலி அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்த பின்னர் காதலி அவரை கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இண்டியானாபோலிசை சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய […]

Continue Reading