பொசான் தினத்தை முன்னிட்டு ஒரு மணி நேர மின்வெட்டு

கொழும்பு,ஜுன் 13 நாட்டில் ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இதன்படி, புதன்கிழமை(14) ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஒரு மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

Continue Reading

யாழ்.மாவட்ட வீரர்கள் முதன்முறையாக வெற்றி

யாழ்ப்பாணம்,ஜுன் 13 இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட எஸ்ரிஆர் கூல் ரெனிஸ்(STR Cool Tennis) 10 வயதிற்குட்பட்ட தனிப்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன்முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். ஆனி மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 7 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் […]

Continue Reading

கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்த பிட்காயின் விலை

வாஷிங்டன்,ஜுன் 13 உலகமெங்கும் கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து உள்ளது. இந்த நாணயத்தை கண்களால் பார்க்கவோ, கைகளால் பரிமாற்றம் செய்யவோ முடியாது. உலகளவில் இதற்கான சட்ட விதிகள் வகுக்கப்படாமல் வர்த்தகம் செய்யப்படுகிறது. டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் இவை பல வடிவங்களில் அறியப்படுகிறது. உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் பலர் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிட்காயின் விலை தற்போது […]

Continue Reading

3 இடங்கள் புனித தலங்களாக வர்த்தமானி வெளியீடு

கொழும்பு,ஜுன் 13 கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முகுது மஹா விஹாரை என்பன புதிய புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கையொப்பமிட்டுள்ளார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் 3 புனித பூமிகள் புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையும் இவற்றில் ஒன்றாகும்.

Continue Reading

நாட்டின் அரச கடன்கள் தொடர்பில் விசேட கணக்காய்வு

கொழும்பு,ஜுன் 13 நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்களுக்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு,ஜுன் 13 இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர்கள் தற்போது மதுபானங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த போதையை தூண்டும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றினை கட்டுப்படுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் […]

Continue Reading

யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி

யாழ்ப்பாணம்,ஜுன் 13 யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று(13) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் […]

Continue Reading

இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா ஒப்புதல்

கொழும்பு,ஜீன் 13 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் தொலைபேசியில் உரையாடினார். சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விளக்கினார். அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Continue Reading

ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் இலகுவாக்கப்பட வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

கொழும்பு,ஜுன் 13 நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதைப் போன்று , நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான வழிமுறைகளும் இலகுவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நிறைவேற்றத்திகார பிரதமர் முறைமை தோற்றம் பெற்றுவிடாமல் இருப்பது தொடர்பிலும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட […]

Continue Reading

அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு

மன்னார்,ஜுன் 13 அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை மேற்கொண்ட வியாபாரிகள் மீது இன்று திங்கட்கிழமை(13) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அரிசியின் நிர்ணய விலை காட்சிப் படுத்தாது, அரிசி விற்பனையில் ஈடு பட்டமை, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை […]

Continue Reading

ஜனாதிபதிக்கு சாதகமாக காணப்படும் 21 ஆவது திருத்தம்?

கொழும்பு,ஜுன் 13 அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு சாதகமாகவே காணப்படுவதாகவும், அவருக்கு பாதகமான நிலை காணப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினரின் ஆதரவு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்துக்கு காணப்படுவதாக தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன், […]

Continue Reading

நாட்டின் மருந்து பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்

கொழும்பு,ஜுன் 13 மருந்து பற்றாக்குறை, மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவசரகால சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அடுத்து வரும் 3 முதல் 4 மாதங்களில் சுகாதார கட்டமைப்பை சரிவடையாமல் பராமரிப்பதற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை குறைந்த […]

Continue Reading