எலகந்த கொலைக்கான காரணம் வௌியானது

கொழும்பு, ஜுன் 14 வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் 23 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று மதியம் 12.10 மணியளவில் வத்தளை, எலகந்த சந்தியில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருப்பு நிற […]

Continue Reading

கற்பாறைகளுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

திருமலை, ஜுன்14 திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். இக்கைக்குண்டு இன்று (14) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளே இவ்வாறு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் கைக்குண்டினை பொலிஸ் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் கந்தளாய் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

பொருட்களை பழைய விலைக்கு மீண்டும் கொண்டுவர முடியாது: பிரதமர்

கொழும்பு, ஜுன் 14 2019 ஆம் ஆண்டில் இருந்த பொருட்களின் விலைகளை மீண்டும் அதே மட்டத்திற்கு கொண்டு வர முடியாது எனவும், படிப்படியாக வருமானத்தை அதிகரிப்பதே செய்ய கூடிய ஒரே வழிமுறை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார். இளைஞர்கள் எதிர்பார்ப்பை கொள்ளக் கூடிய நாட்டை கட்டியெழுப்ப நான் ஏற்றுக்கொண்ட சவாலை நிறைவேற்றுவேன். இந்த வருடத்தில் முடியாவிட்டாலும் […]

Continue Reading

கோட்டா கோ கமவில் சதுரங்கப்போட்டி

கொழும்பு, ஜுன் 14 அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் 60 நாட்களை கடந்தும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந்த சதுரங்க போட்டியில் பலரும் கலந்து கொண்டு பங்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

கோட்டா கோ கமவில் சிரமதானம்

கொழும்பு, ஜுன் 14 கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 67வது நாளை எட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் இன்றையதினம் காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதி கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்களால் சிரமதானம் மூலம் தூய்மையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

எரிபொருள் விலைகள் திருத்தப்படும்

கொழும்பு, ஜுன் 14 எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் மேலும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மின்கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்க இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன தெரிவித்துள்ளார் . உலகச் சந்தையின் எண்ணெய் விலைகள் உட்பட பல காரணிகளை மீளாய்வு செய்ததன் பின்னர்இ எரிபொருள் விலைகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் உரிய விலைச் சூத்திரத்துக்கமைவாக மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சின் […]

Continue Reading

போட்டி மீண்டும் ஆரம்பம்

கண்டி, ஜுன் 14 மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வெத்-லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலியா அணிக்கு 44 ஒவர்களில் 282 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் […]

Continue Reading

மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி

தலவாக்கலை, ஜுன் 14 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை மரம் ஒன்றினை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அம்மரத்தின் ஒரு பகுதி நெஞ்சு பகுதியில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் […]

Continue Reading

நிலாவரை விவகாரம்: தவிசாளர் நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு

யாழ், ஜுன் 14 நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட முடியும் என கடந்த வருட ஆரம்பத்தில் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் வழக்கு மீளவும் எதிர்வரும் புதன் கிழமை (15.06.2022) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் […]

Continue Reading

தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு இன்றுடன் நிறைவு

தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.மீன்களின் உற்பத்தி காலமான கடந்த  இரண்டு மாதங்கள் காணப்பட்டமையால் வருடம் தோறும் ஏப்ரல் ஜூன் ஆகிய மாதங்கள் தமிழக அரசினால் மீன் பிடிப்பதற்கான தடை காலமாக பிரகடனப்படுத்தப்படுகின்றமை வழமையாகும். இதன்பிரகாரம் நாளைய தினத்தில் இருந்து (ஜூன் 15) தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இருப்பினும் நாளைய தினம் தடை உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினமே […]

Continue Reading

எமது மக்களின் சாபமே நாடு இந்த நிலைக்கு காரணம்: வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம்

யாழ், ஜுன் 14 வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாயப் பூமிகளை ஆக்கிரமித்து இன்னமும் தம் வசம் படைத்தரப்பு வைத்துள்ளது. அந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரரான எமது மக்கள் அழுது அழுது ஏங்கிய கண்ணீர் அவர்களின் சாபங்கள்தான் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம். இப்போதாவது அவர்களின் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுமாறு கோருகின்றோம் என வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அ.குணபாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டின் […]

Continue Reading

இலங்கைக்கு உதவ இரு பெரும் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை

கொழும்பு, ஜுன் 14 கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவ உறுதியளித்த இரண்டு நிறுவன பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த இரண்டு நிறுவன பிரதிநிதிகளும் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவன பிரதிநிதிகளே இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading