நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த இந்தியாவையும் தீக்கிரையாக்கிவிட்டது: இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி, ஜூலை 1: முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:- நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம் , […]

Continue Reading

காக்கை தீவு இறங்கு துறையில் மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையம்: டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம், ஜூலை 1: யாழ்ப்பாணம் காக்கைதீவு இறங்குதுறை பிரதேசத்தில் அப் பகுதி மக்களதும் கடல்தொழிலாளர்களின் நன்மைகருதி புதிதாக அமைக்கப்படவுள்ள மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக இன்று நாட்டிவைத்தார்.

Continue Reading

பலாலியில் இருந்து விமான சேவை விரைவில் ஆரம்பமாகும்: டக்ளஸ் உறுதி

யாழ்ப்பாணம், ஜூலை 1: இன்று ஆரம்பிக்க என திட்டமிடப்பட்ட திருச்சி, சென்னை- பலாலிக்கும் இடையிலான விமான சேவை இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்ட திட்டங்கள் மற்றும் எரிபொருள் பிரைச்சனை காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. ஆனால், அது மிக விரைவில் ஆரம்பமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சீன தூதுவர் – தம்பிக்க பெரேரா சந்திப்பு

கொழும்பு, ஜூலை 01 இலங்கையில் சீனத் திட்டங்களைவிரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கானசீனத்தூதுவர் சி சென்ஹொங் தொழில்நுட்ப,முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிகபெரேராவுடன் கலந்துரையாடல்களைமுன்னெடுத்துள்ளார். இலங்கைக்கான சீனத்தூதுவர் சிசென்ஹொங் மற்றும் தொழில்நுட்ப, முதலீட்டுஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராஆகியோருக்கு இடையில் கொழும்பிலுள்ளசீனத் தூதரகத்தில் இடம்பெற்றசந்திப்பின்போதே சீன முதலீடுகளைஊக்குவிப்பது குறித்துக்கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில்முன்னெடுக்கப்படும் சில திட்டங்கள்உள்ளடங்கலாகக் குறிப்பிடத்தக்களவிலானகட்டமைப்புக்களை தம்மிக பெரேராவின்தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புஅமைச்சின்கீழ் கொண்டு வருவதற்கானவர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம்வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Continue Reading

குருநகர் மீனவர் ஊர்காவற்துறை கடலில் சடலமாக மீட்பு

யாழ், ஜுலை 01 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பிரதே பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Continue Reading

வீட்டில் போரணை அமைத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர்

யாழ், ஜுலை 01 தற்போதைய நெருக்கடி நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டிலேயே போரணையை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மற்றும் அமெரிக்காவின் இரசாயனவியல் பேராசிரியரும் துஷ்யந்தி கூல் ஆகியோரின் வீட்டிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

5 சத வீத தனியார் பஸ்களே எதிர்வரும் நாட்களில் சேவையில் ஈடுபடும்

கொழும்பு, ஜுலை 01 எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ்கள் எதிர்வரும் நாட்களில் 5 சதவீதமாகவே சேவையில் ஈடுபடுத்தப்படும். பஸ் கட்டணம் குறித்து மாத்திரம் அவதானம் செலுத்திய போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலக வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, போக்குவரத்து சேவையில் பஸ்கள் தாராளமாக ஈடுப்படுத்தப்படவில்லை ஆனால் பஸ் […]

Continue Reading

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: சிறுவன் உயிரிழப்பு

எம்பிலிப்பிட்டிய, ஜுலை 01 எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர்  மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading

மின் உற்பத்திக்கு 7,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்கும் லங்கா ஐ.ஓ.சி.

கொழும்பு, ஜூலை 1: மின் உற்பத்திக்காக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன், இலங்கை மின்சார சபை நேற்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவுடன் இந்த […]

Continue Reading

மின் திருத்தப்பணிகள் தாமதம் ஆகலாம்

கொழும்பு, ஜுலை 01 எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

Continue Reading

காலி கோட்டை ஆர்ப்பாட்டம்: இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கொழும்பு, ஜுலை 01 காலி கோட்டையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது பதாதைகளை அகற்றியமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேன் நீதிமன்றில் இராணுவத்தினருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading

ரெட்ட உட்பட மூவருக்கு பிணை

கொழும்பு, ஜுலை 01 போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்ட எனப்படும் ரத்திது சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் தலங்கம மற்றும் கோட்டை பிரதேசங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய […]

Continue Reading