ஜேர்மனியில் எரிவாயு பற்றாக்குறை சூழலை எதிர்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்

பெர்லின்,ஜுலை 02 உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட போரால் பல நாடுகளின் பொருளாதார தடைகளை ரஷியா சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவும் பதிலடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் ஜெர்மனிக்கான எரிவாயு வினியோகம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய நெட்வொர்க் கழகத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் கூறும்போது, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் உரிமையாளர்கள் எரிவாயு பாய்லர்கள் உள்ளிட்டவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவை அதிக அளவில் திறம்பட செயலாற்றும் வகையில் […]

Continue Reading

கொரோனா பாதிப்புகளால் நீண்டகால அச்சுறுத்தல்: சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

மெல்போர்ன்,ஜுலை 02 உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்தும் நோக்கிலான பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்டகால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலை கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் கூறும்போது, கொரோனா […]

Continue Reading

லிபியாவில் நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

டாப்ரக்,ஜுலை 02 ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Continue Reading

யாழ் கல்வியங்காட்டு சந்தியில் கத்தி வெட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது

யாழ்ப்பாணம்,ஜுலை 02 யாழ் கல்வியங்காடு சந்தியில் வீதியில் பயணித்த மக்களை கத்தியால் குத்துவதற்கு முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இரவு நடைபெற்றுள்ளதோடு குறித்த இளைஞனின் கத்தி வெட்டு தாக்குதலில் ஒரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் இளைஞர்களால் குறித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டதோடு குறித்த நபரை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த பேருந்தில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம்,ஜுலை 02 யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் சற்று முன்னர் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம்விட […]

Continue Reading

வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கான உணவு விநியோகத்தில் பாதிப்பு

கொழும்பு,ஜுலை 02 தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கான உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய சில பிரதான வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கு பதிலாக மாற்று உணவுகளை வழங்கும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு மாற்று உணவுகளை வழங்கும் நிலை ஏற்பட்டதாக சில வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டனர். எனினும் தற்போது உரிய உணவுகளை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை […]

Continue Reading

ஈரானில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

தெஹ்ரான்,ஜுலை 02 ஈரான் நாட்டின் தெற்கே ஹார்முஜ்கன் மாகாணத்தில் ரிக்டரில் 6.0க்கும் கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு உள்ளன. இதன்படி, முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து ரிக்டரில் 6.3 அளவிலான 2 கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரிக்டரில் 4.0க்கும் கூடுதலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டு உள்ளன. இதனால் […]

Continue Reading

காலி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

காலி,ஜுலை 02 கடல் அலை கரையை கடந்து நிலப்பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் அம்பலாங்கொடை உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிங்கடுவை குமாரகந்த சந்தி வரை வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.. எலகந்த வீதி அவதான நிலையில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

காலியில் கடல் அலைகளின் தாக்கம்: பல இடங்கள் சேதம்

காலி,ஜுலை 02 தென்கடலில் வீசும் பலத்த காற்றின் காரணமாக எழும் கடல் அலைகள் நிலத்தை வந்தடைவதால் காலி நகரின் பல இடங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி கடற்கரை வீதி, துறைமுக பொலிஸ் மற்றும் துறைமுகம் போன்ற பகுதிகள் 2 அடி உயரத்துக்கு கடல் நீரால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படாமைக்கு டக்ளஸ் விளக்கம்

யாழ்ப்பாணம்,ஜுலை 02 பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்று தெரியவருவதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக மனம் வருந்துவதாக  தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பலாலி – திருச்சி, சென்னை விமான நிலையங்களுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Continue Reading

யாழ்-கண்டி வீதியை மறித்து மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம்,ஜுலை 02 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினர்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. அதனால் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்தனர். அந்நிலையில் மாலை 6 மணியளவில் பெட்ரோல் முடிவடைந்து விட்டன என எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடியமையால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தவர்கள், […]

Continue Reading

தனியார் பஸ் உரிமையாளர்கள் எடுத்த தீர்மானம்

கொழும்பு,ஜுலை 02 நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கினால், தற்போதைய பஸ் கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை […]

Continue Reading