எரிபொருள் தேவைப்படும் நிறுவனங்களுக்கான அறிவிப்பு

கொழும்பு,ஜுலை 03 எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது. ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 12 ஆம் திகதி முதல் நாளாந்தம் அல்லது வாராந்த அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாவலப்பிட்டியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாவலப்பிட்டி,ஜுலை 03 எரிபொருள் நெருக்கடி, சமையல் எரிவாயு தட்டுபாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று மதியம் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாவலப்பிட்டியில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று தற்போதைய ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

திருக்கேதீச்சரத்தில் 28 அடி உயர சிவன் சிலை, நாவலர் சிலை திறப்பு

மன்னார்,ஜுலை 03 மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 7 மணியளவில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய தினம் (3) திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து […]

Continue Reading

கோரிக்கையை நிராகரித்த நாமல்

கொழும்பு,ஜுலை 03 புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமான பத்து அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான பத்து அரசியல் கட்சிகளும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. பத்து கட்சிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும் அரசியல் […]

Continue Reading

சில அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

கொழும்பு,ஜுலை 03 நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது. நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் தலைவர் என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார். மக்கள் மீதான கடுமையான சுமையை குறைக்கவும் வர்த்தகர்கள் நுகர்வோரை சுரண்டுவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் நாங்கள் இந்த கொள்கை முடிவை எடுத்தோம் என்று […]

Continue Reading

டொலர் செலுத்தி எரிபொருள் பெறும் நிறுவனங்களுக்கான அறிவிப்பு

கொழும்பு,ஜுலை 03 அமெரிக்க டொலரில் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார். அவர்கள் ஒரு மாதத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும் மற்றும் எரிபொருள் 12 ஆம் தேதி முதல் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் வழங்கப்படும். ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தங்கள் […]

Continue Reading

யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு

யாழ்ப்பாணம்,ஜுலை 03 யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன 2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே. கிருபைராஜா மற்றும் இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர்கள் இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளத்தின் தலைவராக நல்லூர் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர்  சத்தியரூபன் […]

Continue Reading

பஸ்ஸில் ஏற முற்பட்ட வயோதிபர் திடீர் மரணம்

புஸ்ஸல்லாவை,ஜுலை 03 புஸ்ஸல்லாவை விஸ்தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பஸ் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்து, வீடு திரும்புவதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்டபோதே உயிரிழந்துள்ளார். புஸ்ஸல்லாவை, ஹெல்பொட தோட்ட பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மரணம் தொடர்பாக புஸ்ஸல்லாவை […]

Continue Reading

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மலேசியாவிடம் கோரிக்கை

கொழும்பு,ஜுலை 03 மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பெரமுன உறுப்பினர்கள் தெரிவித்துள்ள அதிருப்தி

கொழும்பு,ஜுலை 03 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். அரசியல் ஸ்திரமற்ற தன்மை தற்போதைய நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும். எனவே  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (03)  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும்,ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான […]

Continue Reading

யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம் முதல் விசேட புகையிரத சேவை: டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம், ஜூலை 3: யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அடுத்த வாரம் ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அரச அலுவலகங்களில் பணியாற்றுவதற்காகச் சென்றுவரும் நூற்றுக்கணக்கான அலுவலர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட இந்தப் புகையிரதசேவையைத் தொடங்குவது தொடர்பாக புகையிரதசேவை அதிகாரிகள் நேரில் வந்து ஆராய்ந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் வளாக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சேவையை […]

Continue Reading

முதலையை திருமணம் செய்து கொண்ட ஆளுநர்

மெக்சிகோ,ஜுலை 03 மெக்சிகோ நகரின் ஆளுநர் ஒருவர், முதலையை திருமணம் செய்து கொண்ட விநோத நிகழ்வு நடந்துள்ளது. மத்திய மெக்சிகோவில் உள்ள நகரம் சென் பெட்ரோ ஹவுமெலுலா. இதன் ஆளுநர் விக்டர். இவர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமண நிகழ்வின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணத்தில் முதலை கிறிஸ்துவ முறைபடி வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தது. மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது […]

Continue Reading