செஞ்சிலுவை சங்க தலைவரின் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம்,ஜுலை 04 பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானதினை கொண்டு மக்களுக்கு  நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஆற்றி வருகின்றோம். […]

Continue Reading

மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி

இந்தியா,ஜுலை 04 வி.எல்.சி.சி.-பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022 அழகிப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், 31 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெற்றிபெற்ற அழகிகள் பங்கேற்றனர். அதில் சிறந்த அழகியை தேர்வு செய்ய நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினிஷெட்டி ‘மிஸ் இந்தியா வேர்ல்டு 2022’ பட்டத்தை வென்று முதலிடத்தை பிடித்தார். பின்னர் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. ராஜஸ்தானை […]

Continue Reading

ஆளுங்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த

கொழும்பு,ஜுலை 04 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜக்பக்ஷ இன்று (05) நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ பங்கேற்பது இதுவே முதல் முறை. அவர் சுகயீனமுற்று ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

யாழ். மாவட்ட மக்களுக்கு எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாணம்,ஜுலை 04 யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. யாழ் மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், ராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர். இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், […]

Continue Reading

ஊவா மாகாண வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

பதுளை,ஜுலை 04 ஊவா மாகாணத்தில் ஜூலை 04 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் போது தாமதக் கட்டணம் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் வாகன வருமானப்பத்திரம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம்

கொழும்பு,ஜுலை 04 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, அந்த பணியாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கும் வாய்ப்பு நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

இலங்கையின் கடன் நெருக்கடி ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை

மலேசியா,ஜுலை 04 இலங்கையின் தற்போதைய கடன்நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள்ள முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமட் நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும் மோசமான முதலீட்டுக்கொள்கையுமே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார் சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கான ஒரு எச்சரிக்கை.ஆசிய நாடுகள் பொறுப்புணர்வுள்ள நிதிக்கொள்கையை பின்பற்றவேண்டும் அல்லது மன்னிக்காத சர்வதேச நாணயநிதியத்தின் கரங்களில் சிக்கவேண்டியிருக்கும்.கடன்வழங்கியவர்களிற்கு செலுத்துவதற்கான […]

Continue Reading

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு எழுந்துள்ள சந்தேகம்

கொழும்பு,ஜுலை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போகளிலிருந்து தனியார் பஸ்கள் எரிபொருளை பெற்று அவற்றை விற்பனை செய்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் வழங்கப்படுகிறது. தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்கும் போது போதிய அளவில் விநியோகம் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. எனினும் குறித்த […]

Continue Reading

மின்சாரம் தடைப்பட்டமையால் ரூ.320 மில்லியன் செலவு

கொழும்பு,ஜுலை 04 இலங்கை மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. நீர் மின் நிலையங்களை குறிப்பிட்ட நாளில் இயக்கக்கூடிய நேரத்தில் எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு ரூ.320 மில்லியன் செலவாகியுள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது. திட்டமிடப்படாத சுமை குறைப்பு காரணமாக நீர் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக, ஜூன் […]

Continue Reading

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

கொழும்பு,ஜுலை 04 பயங்கரவாத தாக்குதல் ஒன்றோ அல்லது நாசகார செயல் ஒன்றோ இடம்பெறலாம் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ள கடிதம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மக்கள் குறித்த தகவல் தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் கிடைக்கப் பெற்றுள்ள தகவல் தொடர்பில் பூரண விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Continue Reading

அக்கரவத்தையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

அக்கரவத்தை,ஜுலை 04 வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று(04) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்தே இவர் இன்று (04) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆற்றுப்பகுதியிலிருந்தே […]

Continue Reading

கோப் குழுவில் முன்னிலையாகுமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு அழைப்பு

கொழும்பு,ஜுலை 04 லிட்ரோ நிறுவனம் மற்றும் Litro Gas Terminal ஆகிய நிறுவனங்கள் நாளைய தினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு அரச கணக்குகள் தொடர்பான குழுவில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அரச நிதி தொடர்பான […]

Continue Reading