சீன மக்களின் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்

சீனா,ஜுலை 05 சீன மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் சில தனி நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இவ்வாறு திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் சீன மக்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டை இலக்கங்கள், பிறந்த திகதி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் மாதிரிக்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த தனிநபர் தகவல்கள் 2 இலட்சம் […]

Continue Reading

இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் அபாயம்

கொழும்பு,ஜுலை 05 இலங்கையில் மீண்டும் கொவிட்-19 தலைதூக்கும் அபாயம் உள்ளதால், கொவிட்-19 எதிர்ப்புத் தடுப்பூசியின் நான்கு டோஸ்களையும் பெற்றுக்கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய வகைகளுடன் மீண்டும் கொவிட்-19 பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள […]

Continue Reading

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்க போவதில்லை: ஜனாதிபதி

கொழும்பு,ஜுலை 055 நாட்டை வீழ்ச்சி நிலையிலிருந்து மீட்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட செவ்வாய்க்கிழமை (05) கலந்துரையாடலில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில,  அவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தாம் இணங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தமக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஏற்பாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இன்று  நாடாளுமன்றத்தில் […]

Continue Reading

இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

பிரித்தானியா,ஜுலை 5 தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனையானது இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதன் […]

Continue Reading

ரஷ்ய விமானம் தொடர்பான வழக்கின் உத்தரவுக்கு திகதியிடப்பட்டுள்ளது

கொழும்பு,ஜுலை 05 அண்மையில் ரஷ்யாவின் எரோஃப்ளோட் விமானம் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு ஏதுவாய் அமைந்த வழக்கை, நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அயர்லாந்து நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி […]

Continue Reading

வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

கொழும்பு,ஜுலை 05 வட மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (5) முதல் இந்த நடைமுறை அமுலாகவுள்ளதாக வடமேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரம் வாகன வருமான உத்தரவு பத்திரம் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரவித்துள்ளார்.

Continue Reading

ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? : வைத்தியர் விளக்கம்

கொழும்பு,ஜுலை 5 இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு குறித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர விளக்கமளித்துள்ளார். உலகின் 63 நாடுகளில் பரவி வரும் இ-டு-செவன்-ஃபைவ் என்ற ஓமிக்ரோன் துணை வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அந்நாட்டில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த திரிபு குறித்து பயப்படத்தேவையில்லை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் […]

Continue Reading

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் வழங்கியுள்ள முக்கிய வாக்குறுதி

கொழும்பு,ஜுலை 5 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khalid Nasser Al Ameri இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) தூதரகத்தில் இடம் பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் எண்ணெய் நெருக்கடி குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகபங்காளிகளில் ஒன்றாகும் என்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான 40 […]

Continue Reading

பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு பொறியியலாளர்கள்

கொழும்பு,ஜுலை 5 கடந்த ஜூன் மாத தினம் ஒன்றில் மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இடையூறு தொடர்பில் இரண்டு பொறியியலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். குறித்த தினத்தில் மின்சார உற்பத்திக்கான போதுமான நீர் இருந்தபோதும், டீசலைக்கொண்டே மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதியின்றி மின்சார விநியோகத்தில் தடையும் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரண்டு பொறியியலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

எரிபொருளுக்கான வரிசை: மேலும் 2 மரணங்கள் பதிவு

கொழும்பு,ஜுலை 5 கொழும்பு, பொரளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (5) அதிகாலையில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கொத்தட்டுவ பிரதேசத்தில் வசித்துவந்த 66 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. இவர் தனது மகிழுந்தினுள் காத்திருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுதவிர, பஹல்வெல்ல – ஹன்வெல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் சுகவீனமடைந்து நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவர் ஹன்வெல்ல சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 […]

Continue Reading

அரசாங்க செயற்பாடுகளை முன்னெடுக்க கிரியெல்ல தலைமையில் குழு

கொழும்பு,ஜுலை 5 அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், எதிரணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பி;னர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனினும், ஜே.வி.பி […]

Continue Reading

மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர கோரிக்கை

மன்னார்,ஜுலை 5 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பொருட்டு, எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் விசேட இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் […]

Continue Reading