வீட்டுத்திட்டம் வழங்குமாறு ஒட்டுசுட்டானில் போராட்டம்!

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இதுவைரையில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2017) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுலன்புரி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றையும் கையளித்துள்ளர்.

Continue Reading

யாழிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் அமைச்சர் நிலமைகளை அவதானித்துள்ளார்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருக்கும் இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவனும் கலந்துகொண்டார். இதன்போது வடக்கின் தற்போதைய சூழல் மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் பணிப்பாளருடன் கலந்துரையாடியதோடு நோயாளர்களையும் சந்தித்த பேசியுள்ளார். யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்திருக்கும் சிங்கப்பூர் அமைச்சர்இ அங்கு ஒருதொகுதி […]

Continue Reading