2019 வரவுசெலவுத்திட்டத்தின் செலவு நிர்ணயம் முடிவுக்கு வருகிறது

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளும் பணி அடுத்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படுவதாக திறைசேரி தெரிவித்துள்ளது. இதுவரையில் பல அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார். வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முன்னர், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கம் ஆகியவற்றின் ஆலோசனைகளும் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இந்தக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல அமைச்சுக்களுக்காக […]

Continue Reading

அதி நவீன போர்க்கப்பல் விரைவில் ஜனாதிபதியால் கையளிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலை  எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படையில் 67 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட யுத்தக் கப்பலாகும். இதேபோன்று இந்தியாவில் வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பாரிய யுத்த கப்பலாகவும் இது அமைந்துள்ளது. கடற்படையினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் கோவா கப்பல் தயாரிப்புப் பிரிவில் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக்கான கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை […]

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டது – காரணம் இதுதான்

தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுவதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவறையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் நாளை (04) நள்ளிரவுக்கு முன்னர் வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading