வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு எனும் பகுதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியொன்று பழுதடைந்த நிலையில், வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வானொன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் சாரதியும், லொறியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவருமே காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற போது இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவர் கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீதுஇ கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர்இ தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் […]

Continue Reading