இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி  சிறிசேன வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோவிந்த்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். ‘உங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த […]

Continue Reading

கிழக்கின் கல்முணையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் ததகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை போக்கி, சட்டம், ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசைக் கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Continue Reading

என்னைப் பாதுகாப்பதற்கு தனது உயிரைத் தியாகம் செய்தார் என் மெய்ப்பாதுகாவலர்!

என்னைப் பாதுகாப்பதற்கு துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருடன் சண்டையிட்டுத் தனது உயிரைத் தியாகம் செய்தார் என் மெய்ப்பாதுகாவலர் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களைச் சந்தித்த நீதிபதி இளஞ்செழியன்  ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது மெய்ப்பாதுகாவலர் வவுனியாவில் உச்ச ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியிலும், திருகோணமலையில் கடமையாற்றிய போதும், கொழும்பு, கல்முனை என தற்போது யாழ்ப்பாணத்திற்கு நான் இடமாற்றம் பெற்று வந்தபோதும் என்னுடைய […]

Continue Reading

இந்திய மீனவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – சுஷ்மா சுவராஜ்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இதுபோல், குஜராத் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் அந்த மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்துச்செல்வதுடன், படகுகளையும் கைப்பற்றிவரும் நிலையில், டெல்லி […]

Continue Reading