சுதந்திரமாக நடமாடுகிறார்களா..? குற்றச் செயல்களின் பொருப்பாளிகள்..

யாரை­யா­வது திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இவர்­கள் இப்­ப­டிச் செய்கிறார்­களா..? இந்த கேள்வியை வேறு யாரும் அல்ல இலங்கை ஜனநாயக சோஷசலிய குடியரசின் நீதிபதி ஒருவர் எழுப்பியிருக்கின்றார் என்றால் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கல ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதுவும் நீதித்துறை வரலாற்றில் இருபது வருடங்களை சேவைக்காலங்களாக கொண்ட ஒருவர் யாழ். மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள். இலங்கையின் புரையோடிப்போன சுமார் முப்பது வருடகால ஆயுதப்போராட்டங்களின் சரி பாதிக்கும் மேலான காலங்களை அவர் சட்டம் […]

Continue Reading

காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா கண்கானிக்கிறது!

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். இது விடையத்தில் இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும் ஐ.நா.வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் மறக்கவில்லை எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் (17.07.2017) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றதா என்பதனை ஐ.நா. தரப்பினர் அவதானித்துக் […]

Continue Reading