கிழக்கின் கல்முணையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் ததகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை போக்கி, சட்டம், ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசைக் கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Continue Reading

நீதியமைச்சர் நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சாட்டுவதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பு- மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தாம் சந்தித்த போது அவர்கள் தெரிவித்தாக அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி இருக்குமாயின் அதற்கு உட்பட்டு அரசியல் தீர்மானம் ஒன்றின் பேரில் தம்மை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம், அரசியல்வாதிகள் என அனைவராலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சமய […]

Continue Reading