விக்னேஸ்வரனின் கருத்தைக்கேட்காத கூட்டமைப்பு இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தில்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார்கள் என கூட்டமைப்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவருக்கு, வடக்கு முதல்வர் கோரியிருந்தார். எனினும் அதனை கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், இன்றை கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இன்றைய தினம் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி […]

Continue Reading

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதி தயார்!

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு தமது அமைச்சு தயாராகி வருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். இராணுவம் 146 மில்லியன் ரூபா நிதியினை கோரியுள்ளதாகவும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் குறித்த காணியினை விடுவிப்பதற்கு ஆறு மாத காலம் கோரியுள்ளனர். ஆயினும் அத்தகைய கால எல்லையினை வழங்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். […]

Continue Reading

காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா கண்கானிக்கிறது!

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். இது விடையத்தில் இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும் ஐ.நா.வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் மறக்கவில்லை எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் (17.07.2017) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றதா என்பதனை ஐ.நா. தரப்பினர் அவதானித்துக் […]

Continue Reading

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என். விந்தன் கனகரத்தினம்!

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என். விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் இன்று (17.07.2017) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் வவுனியாவில் நேற்றைய தினம் (16.07.2017) நடாத்தப்பட்டுள்ளது. இதனிடையே டெனிஸ்வரனின் பதவி நீக்கம் குறித்து முதலமைச்சர் இதுவரையில் தன்னுடன் கலந்துரையாடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் […]

Continue Reading

விஷால் அணிக்கு வெற்றி – விரைவில் பதவியேற்பு

இந்தியாவின் தமிழகத்தின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும், செயலாளராக கே.ஈ.ஞானவேல்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் […]

Continue Reading