வடக்கு இனவாத அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இனவாத ரீதியான செயற்படும் சில வடக்கு அரசியல்வாதிகள் அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உறுதியான சில தீர்மானங்கள் மேற்கொள்ள நேரிடும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் கம்பஹ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார். வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை அகற்றுவதற்கு எந்த தீர்மானங்களும் இல்லை.அதற்கான எந்தவித முன்னெடுப்புக்களும் இல்லைஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் உள்ள இனவாதத்தை அடிப்படையாக கொண்டு […]

Continue Reading

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு எனும் பகுதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியொன்று பழுதடைந்த நிலையில், வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வானொன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் சாரதியும், லொறியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவருமே காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

நீதியமைச்சர் நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சாட்டுவதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பு- மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தாம் சந்தித்த போது அவர்கள் தெரிவித்தாக அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி இருக்குமாயின் அதற்கு உட்பட்டு அரசியல் தீர்மானம் ஒன்றின் பேரில் தம்மை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம், அரசியல்வாதிகள் என அனைவராலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சமய […]

Continue Reading