சுதந்திரமாக நடமாடுகிறார்களா..? குற்றச் செயல்களின் பொருப்பாளிகள்..

யாரை­யா­வது திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இவர்­கள் இப்­ப­டிச் செய்கிறார்­களா..? இந்த கேள்வியை வேறு யாரும் அல்ல இலங்கை ஜனநாயக சோஷசலிய குடியரசின் நீதிபதி ஒருவர் எழுப்பியிருக்கின்றார் என்றால் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கல ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதுவும் நீதித்துறை வரலாற்றில் இருபது வருடங்களை சேவைக்காலங்களாக கொண்ட ஒருவர் யாழ். மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள். இலங்கையின் புரையோடிப்போன சுமார் முப்பது வருடகால ஆயுதப்போராட்டங்களின் சரி பாதிக்கும் மேலான காலங்களை அவர் சட்டம் […]

Continue Reading

என்னைப் பாதுகாப்பதற்கு தனது உயிரைத் தியாகம் செய்தார் என் மெய்ப்பாதுகாவலர்!

என்னைப் பாதுகாப்பதற்கு துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருடன் சண்டையிட்டுத் தனது உயிரைத் தியாகம் செய்தார் என் மெய்ப்பாதுகாவலர் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களைச் சந்தித்த நீதிபதி இளஞ்செழியன்  ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது மெய்ப்பாதுகாவலர் வவுனியாவில் உச்ச ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியிலும், திருகோணமலையில் கடமையாற்றிய போதும், கொழும்பு, கல்முனை என தற்போது யாழ்ப்பாணத்திற்கு நான் இடமாற்றம் பெற்று வந்தபோதும் என்னுடைய […]

Continue Reading

மின்சார சபையினரும் போராட்டம்

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் தமது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளதுடன், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமாக இதனை முன்னெடுப்பதாகவும், அதிகாரிகள் தமது கோரிக்கைகளை பொருட்படுத்தாவிட்டால் தொடர்ச்சியாக போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமது குறித்த போராட்டத்தினால் தற்போது நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாகவும் ரஞ்சன் […]

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டது – காரணம் இதுதான்

தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுவதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவறையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் நாளை (04) நள்ளிரவுக்கு முன்னர் வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

இந்திய மீனவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – சுஷ்மா சுவராஜ்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இதுபோல், குஜராத் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் அந்த மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்துச்செல்வதுடன், படகுகளையும் கைப்பற்றிவரும் நிலையில், டெல்லி […]

Continue Reading