ஜனாதி பதியுடன் தமிழ் தலைமைகளின் சந்திப்பு

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகனை முன்னெடுக்கின்றபோது, வடக்கு கிழக்கிற்கும் அதன் பயனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய இரண்டாவது கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அந்த மாகாணங்களின் அபிவிருத்திப் பணிக்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச பணியாளர்களின் பங்களிப்பினை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வடக்கு கிழக்கின் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாத்திரமல்லாது, வாழ்வாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் பணிகளும் நெறிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் […]

Continue Reading

அதி நவீன போர்க்கப்பல் விரைவில் ஜனாதிபதியால் கையளிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலை  எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படையில் 67 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட யுத்தக் கப்பலாகும். இதேபோன்று இந்தியாவில் வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பாரிய யுத்த கப்பலாகவும் இது அமைந்துள்ளது. கடற்படையினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் கோவா கப்பல் தயாரிப்புப் பிரிவில் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக்கான கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை […]

Continue Reading

சுதந்திரமாக நடமாடுகிறார்களா..? குற்றச் செயல்களின் பொருப்பாளிகள்..

யாரை­யா­வது திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இவர்­கள் இப்­ப­டிச் செய்கிறார்­களா..? இந்த கேள்வியை வேறு யாரும் அல்ல இலங்கை ஜனநாயக சோஷசலிய குடியரசின் நீதிபதி ஒருவர் எழுப்பியிருக்கின்றார் என்றால் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கல ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதுவும் நீதித்துறை வரலாற்றில் இருபது வருடங்களை சேவைக்காலங்களாக கொண்ட ஒருவர் யாழ். மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள். இலங்கையின் புரையோடிப்போன சுமார் முப்பது வருடகால ஆயுதப்போராட்டங்களின் சரி பாதிக்கும் மேலான காலங்களை அவர் சட்டம் […]

Continue Reading

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதி தயார்!

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு தமது அமைச்சு தயாராகி வருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். இராணுவம் 146 மில்லியன் ரூபா நிதியினை கோரியுள்ளதாகவும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் குறித்த காணியினை விடுவிப்பதற்கு ஆறு மாத காலம் கோரியுள்ளனர். ஆயினும் அத்தகைய கால எல்லையினை வழங்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். […]

Continue Reading