வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு எனும் பகுதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியொன்று பழுதடைந்த நிலையில், வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வானொன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் சாரதியும், லொறியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவருமே காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

நாட்டு மக்களின் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்க தயார்!

மக்களின் நலனை உறுதி செய்ய எடுக்கக்கூடிய உச்சகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இப்பாகமுவ அல் ஹமதீயா பாடசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சில ஊழியர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை பற்றி தெரிந்து கௌ்ளாது செயற்படுகின்றனர். ஒரு அங்குலம் காணியையேனும் வெளிநாட்டவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போவதில்லை என உறுதியிட்டு கூறுகின்றேன். புரிந்துணர்வின் […]

Continue Reading