விக்னேஸ்வரனின் கருத்தைக்கேட்காத கூட்டமைப்பு இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தில்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார்கள் என கூட்டமைப்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவருக்கு, வடக்கு முதல்வர் கோரியிருந்தார். எனினும் அதனை கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், இன்றை கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இன்றைய தினம் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி […]

Continue Reading

கிழக்கின் கல்முணையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் ததகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை போக்கி, சட்டம், ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசைக் கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Continue Reading

வீட்டுத்திட்டம் வழங்குமாறு ஒட்டுசுட்டானில் போராட்டம்!

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இதுவைரையில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2017) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுலன்புரி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றையும் கையளித்துள்ளர்.

Continue Reading